Showing posts with label ஈழம். Show all posts

இலங்கை சமையல் எப்படி செய்ய வேண்டும்?

இத்தளத்திற்கு சென்று இலங்கை சமையல் எப்படி செய்ய வேண்டும். என்பதை எளிதாக அறியலாம் எப்படி செய்ய வேண்டும் என்பதை  Video மூலம் விளக்குகின்றனர். ஒவ்வொரு வகையான உணவு வகைகளையும் Video மூலம் பார்க்கலாம்.http://tamilkichin.blogspot.com/

ஊர்தோறும் எமது அவலம் உரைத்திடுவோம்

இனமானம் காப்பதற்கு கொடிபிடித்து நாள்தோறும்
குவலயத்தில் பவனிவந்து குறை மறக்கத் துடிக்கின்றார்.
தெம்பிழந்து நாம் வாழத் தினந்தோறும் வழிசொல்லி 
திகைப்பூட்டி தீதுசெய்ய தூண்டுகின்ற காலமிது ! 
நம்பிக்கை வாழ்வை இன்று நசுக்கிடும் காரணிகள் 

 நடைபோடும் காலமிது ! நலம்மாய்க்கும் நேரமிது !
உறக்கத்தைக் கலைத்திடுவோம்
ஊர்தோறும் எமது அவலம்  உரைத்திடுவோம்
உலக மொழிகளில் எமது அவலம்  பெயர்த்திடுவோம் 
ஒற்றுமையை  வளர்த்து  இலக்கை வென்றிடுவோம்.

சமைக்கலாம் வாங்க

,
இத்தளத்திற்கு சென்று பலவகையான சமையல் எப்படி செய்ய வேண்டும். என்பதை எளிதாக அறியலாம் எப்படி செய்ய வேண்டும் என்பதை  Video மூலம் விளக்குகின்றனர். ஒவ்வொரு வகையான உணவு வகைகளையும் Video மூலம் பார்க்கலாம்.

முள்ளிவாய்காலில் இருந்து முல்லை பெரியார் அணை வரை

தமிழரை எவரும் எங்கும் என்ன வேண்டும் என்றாலும் செயல்லாம்  அதற்கு  தமிழரே துணையாக  இருப்பர் என்பது  50 ஆண்டு  கால போராடம் ஒடுக்கப்பட்ட  வரலாறு. உலகில் ஒருபோதும் நடந்து இராத  பேரவலம்
முள்ளிவாய்காலில்  நிகழ்ந்த பின்னரும் கூட சில தமிழ்  தலைவர்கள்  சிங்கள அரசுடன் பதவிக்காக  ஒட்டி வாழ்கின்றனர்.. தங்களை தமிழரின்  காவலர்  என  காட்டிகொள்ளும் சில தலைவர்கள்  யாழ்ப்பாணத்தில் உணர்ச்சி   ததும்ப   பேசுவதும்   பின்னர் கொழும்பில்  சிங்கள அரசுடன் இரகசிய    நட்பை பேணிவருவதும் தமிழ் ஈழ   தமிழரின் கசப்பான வரலாறு. தமிழ் ஈழ  தமிழர் வகை தொகை இன்றி கொலைசெய்யபட்டபோது  முத்துக்குமார் தொடக்கம் செங்கொடி வரை  கிளர்ந்து  எழுந்தபோது  எழுற்ச்சியை அடக்கிய குர்ந்னநிதி போன்றவர்களை  தமிழர்  நம்பலாம். உலக தலைவர்கள்  எம் தமிழ் தலைவர்களை  நன்றாக  அறிந்து  வைதுருக்கின்றனர்  என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்த  உண்மை DAM 999திரைப்பட தயாரிப்பாளர் மிக சரியாக புரிந்து வைத்துருக்கிறார். ஒரு  தண்ணிர் பிரச்சனையை வைத்து திரைப்படம் தயாரித்து ஒரு மாநிலத்தை திரட்ட  முடியும்   என்றால்  ஈழ  தமிழர்  கொத்து கொத்தாக கொலை செய்யபட்டபோது ஒரு திரைப்படம் தயாரித்து  தமிழகத்தை   திரட்ட முடியாமல்   போனது   எனோ? உச்சி தன்னை முகந்தால் திரைப்படம் திரைக்கு வந்தால்  தமிழகத்தை தட்டி எழுப்பி விடுமோ!   என்ற  மதிய  அரசின்  பயம்  காரணமாக  தமிழகத்தின்  கவனத்தை  திசை திருப்ப நீண்டகால முல்லை பெரியார்  அணை விவகாரத்தை தொடக்கிவிட்டுள்ளது. மத்திய அரசு முல்லை பெரியார்  அணை விவகாரத்தின்  வெற்றி     ஆனது    தமிழ் கட்சிகள்    தமது  கருத்து 
முரண்பாட்டை விட்டு ஒன்றுபட்டு தமிழனின் பலத்தை உலகிற்கு காட்டலாம்  வெற்றியும்  பெறலாம்   இது இனியாவது   சாத்தியப்படுமா ? இல்லை
((தமிழ் மக்களை கடவுள் தான் காப்பாற்ற  வேண்டும்  )) தந்தை செல்வா

ஏழைகளின் வாகனம்

இரண்டு ரப்பர் சில்லடா !!!!!
காற்றைக் குடிக்கும் சில்லடா !!!!
எம் பாரம் சுமக்கும் சில்லடா  !!!!
உடலுக்கு ஆரோக்கியத்தைக் கொடுக்குமெடா !!!!!!!!!!!!!!!!
ஏழைகளின் வாகனம்

அடடா கருணாநிதிக்கு இவ்வளவு மரியாதையா??

இப்பகுதியில்  வரும் சம்பவங்கள் நாளிதழ்களில் வந்த சம்பவங்களை மையமாக வைத்து எழுதபட்டவை    

போர் குற்றத்திலிருந்து தப்பிப்பதற்காக மகிந்த தனது சகாக்களுடன் இரகசிய  ஆலோசனை நடாத்துவதாக அறிந்தேன்.  எப்படியாவது அதில்  என்ன  நடக்கிறது  என அறிய  வேண்டும் என முடிவெடுத்தேன்.  முதலில் எனது தலைமயிரை  முன்னோக்கி  வாரிவிட்டேன்.   எனது முகமும் வட்டமுகமாகவும்  சப்பை மூக்காவும்   இருந்தமையால் வாயிற் காவலர்  என்னை சீனன் என நினைத்து ஒன்றும் விசாரிக்கவில்லை. அப்பாடா ஒருவாறு நுழைந்துவிட்டேன் என நினைத்தேன்.   எங்கும்  இராணுவ வீரர்கள் பாதுகாப்பு பலமாக இருந்தது.  ஒரு மண்டபத்திற்குள்  சோதனையின் பின்னர் அனைவரும்  அனுமதிக்கப்பட்டார்கள். நான் எப்படி நுழைவது என யோசித்தேன்.  அருமையான  இடியா தோன்றியது நான் மண்டப வாயிற் காவலரிடம் தமிழ் நாட்டில்  இருந்து  வருகின்றேன்.  கனி மொழி     இப்போது சிறையில் இருப்பதால் கருணாநிதி என்னை அனுப்பினாருங்கோ    சார் என்றேன். என்ன ஆச்சரியம் எந்தவித சோதனையும் இல்லாமல்  என்னை மண்டபத்துக்குள்  அனுமதித்தனர்.   அடடா  கருணாநிதிசாருக்கு  இவ்வளவு மரியாதையா?? சரி மண்டபத்திற்க்குள்ளே மகிந்தவின் நெருங்கிய   சகாக்கள் அமர்ந்திருந்தனர். ( அவரகளின்  பெயர்கள்  சிறிது  மாற்றம்  செய்துள்ளேன் )
 சோமாபாய, SLசீரிஸ் , குறுநா , டுக்கிலஸ் , விம்மல் வீரவன்ச

  சில நிமிடங்களின் பின்னர் மிகவும் கலக்கமுற்ற  முகத்துடன்  மகிந்த வந்தார் . ஆயுபோவன்  வயக்கம் (வணக்கம் )சில வெள்ளைக்காரர்கள்  என் மீது  போர் குற்றம் சுமத்தி வருகின்றனர். எவ்வளவு முயற்சி செய்தும்  இவர்களை   வழிக்கு கொண்டு  வர  முடியவில்லை. இவர்களை எமது வழிக்கு கொண்டிவர என்ன வழியெனக் கூறுங்கள்.
விம்மல் வீரவன்ச :- சாகும்வரையான உண்ணா விரதம் இருப்பேன்.

மகிந்த:- மறுபடியும் நான் வந்து யூஸ் கொடுத்து  முடித்து  வைக்கவா ?

டுக்கிலஸ் :- அனைவருக்கும் இலவச   தொலைக்காட்சிப்பெட்டி  கொடுப்போம்

 முனைங் :-  சார் நம்ம  கருணாநிதி மாதிரியே பேசுறார் 


   
மகிந்த :- அட தொலைக்காட்சிப்பெட்டியைக் கண்டுபித்ததே  வெள்ளைக்காரர்தான்

குறுநா  :- உங்களது பெயரில் யாழில் ஒரு விளையாட்டு மைதானத்தைத் திறந்துவிடுவோம்.

மகிந்த :- எங்கே  வந்து எதைப்  பெசுவதுதெனத்  தெரியவிலையா?

SL சீரிஸ் :- வெள்ளைக்காரர்க்கு ஒரு தண்ணிப் பாட்டி வைத்துவிடுவோம்

மகிந்த :-      அதுதான் ஏற்கனவே வைத்திவிட்டேனே!

சோமாபாய :- இங்குள்ள ஒருவருக்கும்  உலக  அரசியல்  அனுபவம்  போதாது  அமெரிக்காவில்  வெள்ளைகளுடன்  நிண்ட  காலம்  வாழ்ந்தவன்  என்ற  வகையில்  இப்போது  வெள்ளைக்காரர்க்கு நிர்வாணமாக  நடமாடுவதுதான்.  ரொம்ப  பிடிக்கும் எனவே எமது  நாட்டில்  நிர்வாணமாக  நடமாடும் கடற்கரையைத்  திறந்துவிடுவோம்.   கழியாட்ட  விடுதிகளையும்  திறந்துவிடுவோம். தமிழரின்  கலாச்சாரமும்  அழிந்து  தமிழினமும்  அழிந்து போகும்  எமக்கு   நல்ல   வருவாய்   கிடைக்கும். போர் குற்றம் சுமத்தும் வெள்ளைக்காரர்களையும் அங்கு நடமாடவிட்டு   எமது கைக்குள்  கொண்டுவரலாம்.

மகிந்த: - அருமையான ஆலோசனை தம்பி உடனே தொடங்குவோம்.



முனைங் :-(அடட பாவிங்களா   என்ன   முடிவு எடுத்தாலும் தமிழனை அழிப்பதை மையமாக வைத்து எடுக்கிறாங்க. சிங்களவனுக்கு   தமிழனை அழிப்பது இரத்தத்தில் உறிவிட்டுது   போல!)

 

((உங்க உள்குத்து புரியல... உண்மையான செய்தி என்ன...?))ஆதாரம் இந்த பகுதி உருவாக  பின்னூட்டம்   மூலம்   வினவிய Philosophy Prabhakaranனுக்கு  எனது  நன்றிகள் 

ஆதாரம் :-(( நிர்வாணமாக  நடமாடும் கடற்கரையைத்  திறந்துவிடுவோம்.   கழியாட்ட  விடுதிகளையும்...... தமிழரின் கலாச்சாரமும் அழிந்து .....))) என்ன காரணம் காண்க இது நடை பெறபோகும் புதிய அழிப்பு

  கருணாநிதின் தமிழ் பணி அம்பலம்

((வெள்ளைக்காரர்க்கு ஒரு தண்ணிப் பாட்டி வைத்துவிடுவோம்..))) 

இலங்கை அரசுடன் இந்திய கள்ள காதல்! அம்பலமாகும் உண்மைகள் 02

கருணாநிதின் தமிழ் பணி அம்பலம்

பெரிதாக பார்க்க மேலுள்ள பந்தியில் கிளிக்  பண்ணவும் 
ராதிகா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இப் பெண்ணின் வயது 19 ஆகும். அவர் யாழில் உறவினர்களுடன் வசித்துவந்தார். இப் பெண்ணை முதலில் இலங்கைப் புலனாய்வுப் பிரிவினர் கைதுசெய்து பின்னர் அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். 3 கிழமைகளுக்குப் பின்னர் விடுவிக்கப்பட்ட அப்பெண் சிகிச்சைக்காகச் சென்றபோது அவருக்கு எயிட்ஸ் நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து அவர் மனம் உடைந்த நிலையில் இருந்ததோடு அவரை உறவினர்களும் வீட்டை விட்டு வெளியேறுமாறு கூறிவிட்டனர். ஒரு ஏஜன்டின் கைகளில் மாட்டிக்கொண்ட அப்பெண்ணுக்கு பல கதைகள் சொல்லப்பட்டிருக்கிறது. அதாவது "துன்பத்தைத் தந்தவனுக்கே அதை திருப்பிக்கொடு" என்று கூறுவதுபோல உனக்கு இந்த வருத்தத்தை தந்தவர்களுக்கு நீ அதனைத் திருப்பிக்கொடு என்று சிலர் கூறி அவரை மூளைச் சலவை செய்துள்ளனர்.

அதனால் அப் பெண் இலங்கை இராணுவம் சென்றுவரும் விபச்சார விடுதி ஒன்றில் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் நோக்கம் முழுவதும் தனக்கு பரவிய நோயை எல்லா இராணுவத்துக்கும் பரப்புவது என்பது தான். ஒரு பழிவாங்கலைப் போல அப்பெண் தன்னை வருத்தி இச் செயலில் ஈடுபட்டுள்ளார். நாட்கள் கடந்தோடிய நிலையில் நோய் முற்றியிருக்கவேண்டுமே இதுவரை எயிட்ஸுக்கு மருந்து எடுக்கவில்லையா என நெருங்கிய தோழி ஒருவர் கேட்டபோது அப் பெண் திரும்பவும் வைத்தியசாலை சென்றுள்ளார். குறிப்பிட்ட அந்த சிங்கள வைத்தியர் அங்கு இல்லாத காரணத்தால் அவர் வேறு ஒரு வைத்தியரிடம் சிகிச்சை பற்றி ஆலோசனை நடத்தியுள்ளார். ஆனால் அப்பெண்ணுக்கு எயிட்ஸ் நோய் இருப்பதற்கான எந்த அறி குறியும் காணப்படாததால் சந்தேகமுற்ற மருத்துவர் அப்பெண்ணை மீண்டும் ரத்தப்பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளார்.

கிடைக்கப்பெற்ற பேறுகளால் அப்பெண் ஆடிப்போயுள்ளார். குறிப்பாகச் சொல்லப்போனால் இன்றுவரை அவருக்கு எயிட்ஸ் நோயின் தாக்கம் இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. முன்னர் அங்கே இருந்த சிங்கள டாக்டரின் பெயரும் தெரியாது, பரிசோதித்த டாக்டர் ஏன் தான் இருக்கும் உறவினர் வீட்டிற்கு தனக்கு எயிட்ஸ் நோய் இருப்பதாக அறிவித்தார் என்பது எல்லாம் அப் பெண்ணுக்கு மெல்ல மெல்ல புரிய ஆரம்பித்தது. தான் அனாதரவாக இருந்தபோது தன்னை அரவணைத்து புத்திசொல்வது போல பாழுங்கிணற்றில் தள்ளிய நபர்கள் மாயமாக மறைய. உயர் பாதுகாப்பு வலயத்திற்கு அருகில் இராணுவ உதவியோடு இயங்கும் அந்த விபச்சார விடுதியைக் காட்டிகொடுக்கவும் முடியாது இப் பெண் தத்தளித்துள்ளார். தற்போது அவர் இந்தியா சென்று அங்கே நிம்மதியாக வாழ யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வங்கி ஊழியர் ஒருவர் உதவி புரிந்துள்ளார்.

இதில் வேதனையான விடையம் என்னவென்றால் இந்த வங்கி ஊழியரும் ஒரு காலத்தில் இப் பெண்ணிடம் சென்றவராம். தமிழர் என்று நினைக்கவேண்டாம். அவர் ஒரு சிங்களவர். ஆனால் பாதிக்கப்பட்ட பெண்ணை தற்செயலாகக் கண்ட அவர், இப் பெண் கூறிய சோகக்கதையை அரை குறையாக விளங்கிக்கொண்டு இந்த உதவியைச் செய்துள்ளார். சென்னை சென்றதும் பெண்கள் நல வாரியத் திட்டத்தின்கீழ் பாதிக்கப்பட்ட இப் பெண்ணுக்கு உதவுவதாக செல்வி ஜெயலலிதாவின் அரசு தெரிவித்துள்ளது பெரும் நம்பிக்கையை ஊட்டுவதாக உள்ளதாக அவர் அதிர்வு நிருபருக்குத் தெரிவித்துள்ளார்.  
நன்றி அதிர்வு

உங்கள் நினைவுகளைச் சுமந்து வாழ்கின்றோம்

இதயத்துடிப்பினிலே.....  

எங்களை விட்டு இறைவனடி சென்றீர்களே!

அதிர்ச்சியினால் என்ன செய்வதென்று அழுது துடித்தோம்

உம்மைக் காணாது நிலை தடுமாறி நின்றோம்

பாசமுள்ள பிள்ளைகளை நேர்வழிகாட்டி விருட்சமாக்கி

பரிதவிக்கவிட்டுச் சென்றாயோ!

குடும்பத்தின் வழிகாட்டியாகவும் பாசத்தின் ஒளி விளக்காகவும் இருந்த

நீங்கள் பிரிய மனம் வந்ததோ!

அன்பு மொழி பேசி எங்களை மகிழ வைப்பீர்களே!

உம் அன்பு மொழி எப்போது கேட்போம்!

உம் பிரிவால் முகம் வாடி நிற்கின்றோம்

உம் இறுதி மூச்சில் எத்தனை ஏக்கங்களுடன் சென்றிரோ!

ஆண்டுகள் சென்றாலும் எம் நெஞ்சை விட்டகலாது

உங்கள் நினைவுகளைச் சுமந்து வாழ்கின்றோம்

இக் கவிதை இந்திய அமைதி படையால் கடுமையாக தாக்கி  இறந்த என் அப்பாவுக்கு சமர்பிக்கிறேன்

இலங்கைத் தமிழர்களுக்காக தமிழக கட்சிகள் வெறும் வார்த்தைஜாலங்கள் மட்டுமே!


இலங்கைத் தமிழர்களுக்காக தமிழக அரசியல் கட்சிகள்  உதட்டளவில் மட்டுமே ஆதரவைத் தெரிவித்தன என்று விக்கிலீக்ஸ் இணையதளம் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளது.


 இந்தியாவில் பணியாற்றிய அமெரிக்க தூதரக அதிகாரிகளை மேற்கோள் காட்டி இந்தத் தகவலை விக்கிலீக்ஸ் வெளியிட்டிருக்கிறது.


 இலங்கை இறுதிக்கட்ட போரின்போது தமிழக அரசியல் கட்சிகள் வெறும் வார்த்தைகளால் மட்டுமே தங்களது கண்டனத்தை தெரிவித்தன, இலங்கைத் தமிழர்களுக்காக அந்தக் கட்சிகள் தெரிவித்த ஆதரவும் உதட்டளவில் மட்டுமே இருந்தது என்று 2006-ல் இந்தியாவுக்கான அமெரிக்க தூதரக கான்சல் ஜெனரலாகப் பணியாற்றிய டேவிட் ஹூப்பர் கூறியுள்ளார்.
 2007 நவம்பர் 20-ல் இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதரகம் வாஷிங்டனுக்கு அனுப்பிய மற்றொரு தகவலில் திமுக தலைவர் கருணாநிதி பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

 விடுதலைப் புலிகளுக்கு ஆதரவளிப்பது தொடர்பான விவகாரத்தில் கருணாநிதி சாதுர்யமான அணுகுமுறையைக் கடைப்பிடித்தார். கட்சித் தொண்டர்களையும், காங்கிரûஸயும் சமாதானப்படுத்தும் வகையில் அவர் நடந்து கொண்டதாக அமெரிக்க தூதரக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.


இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவான அவரது கோரிக்கைகள், வெறும் வார்த்தைஜாலங்கள் மட்டுமே, அவர் உதட்டளவில் மட்டுமே பேசினார். இலங்கைத் தமிழர்களுக்கு சாதகமாக கருணாநிதி பேசினாலும், அவர்களுக்காக மத்திய அரசை எவ்விதத்திலும் நிர்பந்திக்கவில்லை என்று வாஷிங்டனுக்கு அனுப்பிய தகவல்களில் அமெரிக்க தூதரக அதிகாரிகள் தங்கள் கருத்தைப் பதிவு செய்துள்ளனர். 
 நன்றி eu

இன்னுமா அடங்கவில்லை உன் கொலை வெறி ?


 ராஜீவ் காந்தி  உயிர்ரோடுடிருகையில்  ஈழத் தமிழர் உயிர் குடித்தாய் 
 நீ இறந்தும் லட்ச லட்சமாய் ஈழத் தமிழர்உயிர் குடித்தாய் 
 இன வெறி அரசை ஏவிவிட்டு எம் மீனவர்  உயிர் குடித்தாய் 
 இன்னும் மூன்று  தமிழர் உயிர் குடிக்க  துடியாய் துடிக்கிறாய் 
 இன்னுமா அடங்கவில்லை உன்  கொலை வெறி

 


முள்ளிவாய்க்காலில் நடந்தது என்ன?உண்மை சாட்சி

Zee தமிழ் தொலைகாட்சி  இப் போது     இலங்கையில்  தடை  செய்ய பட் டுள்ளது. இதே போல
ஆனந்த விகடனுக்கும்  இலங்கையில்  தடை என்பது அனைவரும் அறிந்தே Zee தமிழ் தொலைகாட்சியில் ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சியின் காணொளி: சிங்கள இனவெறி அரசால் திட்டமிட்டு நடத்தப்பட்ட முள்ளிவாய்க்கால் பேரழிவால் தனது அனைத்து உறவுகளையும் இழந்து தனது மகனோடு தப்பி தமிழகத்தில் அகதியாகி வாழும் ஒரு தமிழீழ சகோதரியின் உள்ளக் குமுறல்

இலங்கை அரசுடன் இந்திய கள்ள காதல்! அம்பலமாகும் உண்மைகள் 02

இலங்கை அரசுடன் இந்திய கள்ள காதல்! அம்பலமாகும் உண்மைகள் !!

 

என   ஒரு நகைச்சுவை இடுகை எழுதி இருந்தேன். இப்போது  அது உண்மை என்பது அதிர்வு  தளம் புகை பட ஆதாரங்களுடன் வெளியிட்டுள்ளது   

இங்கே

இலங்கை அரசுடன் இந்திய கள்ள காதல்! அம்பலமாகும் உண்மைகள் !!

உலகமே போர் குற்றவாளி  என கூற இலங்கை  (எம்.பி.கள்) களை விருந்தினராக இந்திய நாடாளுமன்றத்துக்கு அழைத்ததன் மர்மம்  என்ன ?? லங்கை அரசுடன் இந்திய அரசுக்கு உள்ள உறவு . இலங்கை போரின் பங்காளிகள் யார் ? காணொளி