Showing posts with label wifi hack. Show all posts

எங்கும் wifi

இன்றெல்லாம் இணையப் பாவனைக்காக அதிகளவில் WiFi தொழில்நுட்பத்தினையே பயன்படுத்தி வருகின்றனர்.
இதனைக் கருத்தில்கொண்டு பல்வேறு தொலைத் தொடர்பாடல் வலையமைப்பு சேவையை வழங்கிவரும் நிறுவனங்கள் 4G தொழில்நுட்பத்தினை WiFi ஆக மாற்றும் சாதனங்களை அறிமுகம் செய்துள்ளன.
எனினும் இவை ஒவ்வொரு நிறுவனங்களுக்கும் தனித்துவமானதாகவே காணப்படும்.
ஆனால் தற்போது 100 வகையான நாடுகளுள் பயணிக்கும்போது எந்தவொரு வலையமைப்பிலிருந்தும் 4G சமிக்ஞையை WiFi சமிக்ஞையாக மாற்றக்கூடிய சாதனம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
GeeFi எனும் இச் சாதனத்தின் ஊடாக அதிகபட்டசம் ஒரே தடவையில் 10 சாதனங்களை இணைக்க முடியும்.
இதேவேளை இச் சாதனத்தினை பயன்படுத்துவதற்கு ரோமிங் வசதி அவசியம் இல்லை என்பதுடன் வரையறையற்ற (Unlimited) இணையப் பாவனையை மேற்கொள்ளவும் முடியும்.
இச் சாதனத்தில் 5,000 mAh மின்கலம் இணைக்கப்பட்டுள்ளதுடன், நீண்ட நேரம் செயற்படக்கூடியதாகவும் இருக்கின்றது.
தற்போது Kickstarter தளத்தில் விளம்பரப்படுத்தப்பட்டுள்ள இச் சாதனத்தின் விலையானது 110 அமெரிக்க டொலர்கள் ஆகும்.

உங்கள் பாஸ்வேர்டினை ஹேக் செய்ய எவ்வளவு நாட்கள் பிடிக்கும் ?

அனைவரும் இப்பொழது மெயில் ஐடி அல்லது ஏதாவது ஒரு இணையதளத்தில் நுழைய லாகின் ஐடி வைத்திருப்பார்கள். அதன் பாஸ்வேர்ட் அவர்களுக்கு மட்டுமே தெரிந்ததாக இருக்கும்.உங்களுடைய பாஸ்வேர்டினை உடைக்க அதாவது ஹேக் செய்ய எவ்வளவு நாட்கள் பிடிக்கும் என்று தெரிந்து கொள்ள ஆசையா இங்கே செல்லுங்கள் இந்த தளத்தின் பெயர் How Secure Is My Password?  இந்த தளத்தில் உங்கள் பாஸ்வேர்டினை கொடுத்தால் எவ்வளவு நாளில் உங்கள் பாஸ்வேர்டினை கண்டுபிடிக்க முடியும் என்று கூறிவிடுவார்கள். 
ஆனால் இந்த  தளத்தில் உங்கள் உண்மையான பாஸ்வேர்டினை கொடுக்காலம் வேறு ஏதாவது கொடுத்து முயற்சி செய்யலாம்

எனது இணைய இணைப்பை யாரெல்லாம் பாவிக்கிறார் ?

முதலில் நாம் இணையத்திற்கு வயர்கள் மூலமாக இணையத்தில் உலாவந்தோம். ஆனால் இப்பொழுது அனைவரும் வயர் ப்ரீ அல்லது வயர்லெஸ் மூலமாக வேகமாக இணையத்தில் உலா வருகிறோம். 
ஆனால் அதே நேரத்தில் நம் வீட்டுக்கு வெளியே காரில் இருந்து கொண்டு அல்லது பக்கது வீட்டில் இருந்து கொண்டு யாராவது நம் வயர்லெஸ் மோடம் வழியாக நம் காசில் இணையத்தில் உலாவந்தால் என்ன ஆகும். 

நம் காசும் போச்சு நம் தனி மனித இணைய பாதுகாப்பும் போச்சு என்று கொள்ள வேண்டியதுதான். இது போல நடந்தால் கண்டுபிடிக்க நம் கணனி தவிர வேற எந்த கணனிகள் நம் வயர்லெஸ் மோடம் வழியாக இயங்குகிறது என்று தெரிந்து கொள்ள Who is on my Wifi என்ற மென்பொருள் உதவுகிறது.