Showing posts with label ஹேக். Show all posts
ஈழம் என்றாலே தடைதான். போராட்டம்தான்!
நீங்கள் மலேசியாவுக்குள் நுழையத் தடை செய்யப்பட்ட நபர். எங்கள் நாட்டுக்குள் நீங்கள் செல்ல அனுமதியில்லை மலேசியாவில் இறங்கியதும் விமான நிலையத்தில் வைகோவைப் பார்த்து அந்த அதிகாரி சொன்னார்.
உரிய அனுமதிகள், பரிசோதனைகள், எடுத்துத்தான் மலேசியா செல்வதற்கு அவருக்கு விசா அளிக்கப்பட்டது என்பதால், வைகோ திடுக்கிட்டார்.
நான் முறையான அனுமதி பெற்றுத்தான் வருகிறேன் என ஆவணங்களைக் காட்டுகிறார்.
நீங்கள் இலங்கை குடிமகன்தானே? இது அடுத்த கேள்வி. இல்லை, நான் இந்தியக் குடியுரிமை பெற்றவன். தமிழ் இனத்தைச் சேர்ந்தவன் என்று சொல்கிறார்.
நீங்கள் எல்.டி.டி.இ அமைப்பைச் சேர்ந்தவர்தானே? நான் அந்த அமைப்பைச் சேர்ந்தவன் அல்ல. அந்த அமைப்பின் ஆதரவாளன்!
அது தடை செய்யப்பட்ட அமைப்புதானே? அதைப் பற்றி இந்த இடத்தில் உங்களிடம் நான் விளக்கம் அளிக்கவோ, விவாதம் செய்யவோ தயாராக இல்லை. சூடாகிறார் வைகோ.
அதிகாரிகள், உங்களை நாட்டுக்குள் அனுப்ப முடியாது எனச் சொல்லி, ஓர் அறைக்கு அழைத்துச் செல்கிறார்கள். அங்கு நாற்காலியில் உட்காருகிறார் வைகோ. மலேசியாவில் இப்படி வைகோவுக்கு நடப்பது இரண்டாவது முறை.
வைகோவும் மலேசியாவின் பினாங்கு மாகாணத் துணை முதல்வர் பேராசிரியர் ராமசாமியும் இணைந்து பினாங்கில் இரண்டு மாநாடுகள் நடத்தினர்.
ஈழத் தமிழர் இனப்படுகொலை தொடர்பாக இலங்கை அரசு மீது பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தில் நீதி விசாரணை நடத்த வேண்டும், தமிழீழத்துக்கான பொது வாக்கெடுப்பு உலகம் முழுக்க நடத்தப்பட வேண்டும் என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, உலக நாடுகளின் கவனத்துக்குக்கொண்டு செல்லப்பட்டன.
இது இலங்கை அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்திய நிலையில், வைகோவை எந்த நாட்டுக்கும் போகவிடாமல் செய்யும் வேலைகளில் இலங்கை அரசு இறங்கியது.
1989-ம் வருடம் ஈழம் சென்று பிரபாகரனுடன் ஒரு மாத காலம் தங்கியிருந்தார் வைகோ. அப்போது பிரபாகரனும் வைகோவும் சேர்ந்திருக்கும் புகைப்படங்கள் எடுக்கப்பட்டன.
விடுதலைப்புலிகள் அமைப்பின் சீருடையை வைகோ அணிந்து இருப்பது போல படங்களும் எடுக்கப்பட்டன. அதை ஆதாரமாகக்காட்டி, ‘வைகோ விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினர்’ என்று சொல்லியிருக்கிறதாம் இலங்கை.
இதை வைத்துத்தான் அவர் மலேசியா வுக்குள் நுழையவிடாமல் தடுக்கப்பட்டுள்ளார்.2015-லும் மலேசியாவுக்குள் நுழைய விசா தராமல் இழுத்தடித்தார்கள்.
ஆனால், மலேசிய துணைப் பிரதமர் வரை விஷயத்தைக் கொண்டுச் சென்று அனுமதி வாங்கினார்கள். பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் ராமசாமி, குலசேகரன் எம்.பி ஆகியோர் அதற்கு முயற்சி எடுத்தார்கள்.
அப்போது மலேசிய எம்.பி-க்கள் மத்தியிலும் வைகோ நீண்ட நேரம் பேசினார். அது இலங்கை அரசாங்கத்துக்குக் கோபத்தை ஏற்படுத்தியது. அதனால்தான் இம்முறை எப்படியும் உள்ளே விடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்துள்ளனர்.
பினாங்கு துணை முதல்வர் ராமசாமியின் மகள் திருமண வரவேற்பில் கலந்து கொள்வதற்காக, கடந்த 9-ம் தேதி அதிகாலை தனிச்செயலர் அருணகிரியுடன் சென்னையிலிருந்து கிளம்பி, மலேசியக் கோலாலம்பூர் விமான நிலையத்தில் இறங்கினார்.
அன்று இரவே திருப்பி அனுப்பப்பட்டார். சாப்பிடக்கூட அவரை அனுமதிக்கவில்லை. அருணகிரி மூலமாக வைகோ உணவை வாங்கிக் கொள்ளலாம் என்றார்கள்.
கடுப்பான வைகோ அப்படி ஒன்றும் நான் சாப்பிடத் தேவையில்லை எனச் சொல்லி விட்டார். தண்ணீர் மட்டும் வாங்கி குடித்தார்.
மாலையில் இந்தியத் தூதரக அதிகாரி திருமூர்த்தி, வைகோவைத் தொடர்பு கொண்டு, சாப்பிடாமல் இருப்பது வருத்தமாக இருக்கிறது. என் வீட்டிலிருந்து சாப்பாடு அனுப்பட்டுமா? எனக் கேட்டுள்ளார்.
அதையும் கனிவாக மறுத்து விட்டார். 16 மணி நேரம் கழித்து, சென்னையில் வீட்டுக்கு வந்து தான் சாப்பிட்டார்.
இனி வைகோவின் வெளிநாட்டுப் பயணங்கள் எதுவும் சாத்தியம் இல்லை என்றே சொல்கிறார்கள்.
2011 ஜூனில் பெல்ஜியம் நாட்டின் பிரஸ்ஸல்ஸ் நகரில் உள்ள ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்ற வளாகத்தில் இனப் படுகொலைக்கு நீதி விசாரணை வேண்டிக் கருத்தரங்கு நடத்தப்பட்டது. அப்போதும் இப்படித்தான் நடந்தது.
தொடர்ச்சியாக வைகோவுக்கு தடைவிதிக்கும் வெவ்வேறு நாடுகளின் முடிவுக்குப் பின்னால் இருப்பது இலங்கைதான்.
இது வைகோவை மட்டுமல்ல, ஒட்டுமொத்தத் தமிழினத்தையும் அவமதிக்கும் செயல் எனப் பொங்குகிறார்கள், புலம்பெயர் ஈழத் தமிழர் அமைப்புகளின் நிர்வாகிகள்.
தடையை உடைத்து வைகோவை மலேசியாவுக்குள் அழைத்து வருவேன்’ என்று திருமண விழாவில் சொல்லியிருக்கிறார் ராமசாமி.
ஈழம் என்றாலே தடைதான். போராட்டம்தான்!
- Vikatan

WhatsApp Gold திருடும் ஹேக்கர்கள் உஷார்
WhatsAppஐ ‘WhatsApp Gold’ ஆக மாற்றுங்கள் என்று ஒரு தகவல் பரவி வருகிறது.
இணையத்தில் தகவல்களை திருடும் ஹேக்கர்கள் பல முறைகளை பயன்படுத்தி வருகின்றனர். தற்போது அவர்கள்‘WhatsApp Gold’ என்னும் முறை மூலம் WhatsApp பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை திருடும் முயற்சியில் இறங்கி உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
பிரபலங்கள் மட்டுமே பயன்படுத்தும் ’WhatsApp Gold’ தற்போது அனைராலும் பயன்படுத்த முடியும் என்ற தகவலோடு ஒரு மெசேஜ் WhatsAppல் வேகமாக பரவி வருகிறது.
உங்களது WhatsAppஐ ‘WhatsApp Gold’ ஆக மேம்படுத்திக் கொள்ள ஒரு இணையத்தளமும் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த இணையதளம் செயல்படவில்லை.
இதனால் இது WhatsApp பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை ஹேக்கர்களின் திருடும் முயற்சியாக கருதப்படுகிறது. எனவே உங்களது நண்பர்களும் உங்களுக்கு இந்த மெசேஜை அனுப்பினால் உஷாராக இருந்து கொள்ளுங்கள்.

உங்கள் பாஸ்வேர்டினை ஹேக் செய்ய எவ்வளவு நாட்கள் பிடிக்கும் ?
அனைவரும் இப்பொழது மெயில் ஐடி அல்லது ஏதாவது ஒரு இணையதளத்தில் நுழைய லாகின் ஐடி வைத்திருப்பார்கள். அதன் பாஸ்வேர்ட் அவர்களுக்கு மட்டுமே தெரிந்ததாக இருக்கும்.உங்களுடைய பாஸ்வேர்டினை உடைக்க அதாவது ஹேக் செய்ய எவ்வளவு நாட்கள் பிடிக்கும் என்று தெரிந்து கொள்ள ஆசையா இங்கே செல்லுங்கள் இந்த தளத்தின் பெயர் How Secure Is My Password? இந்த தளத்தில் உங்கள் பாஸ்வேர்டினை கொடுத்தால் எவ்வளவு நாளில் உங்கள் பாஸ்வேர்டினை கண்டுபிடிக்க முடியும் என்று கூறிவிடுவார்கள்.
ஆனால் இந்த தளத்தில் உங்கள் உண்மையான பாஸ்வேர்டினை கொடுக்காலம் வேறு ஏதாவது கொடுத்து முயற்சி செய்யலாம்
Subscribe to:
Posts
(
Atom
)