WhatsApp Gold திருடும் ஹேக்கர்கள் உஷார்

WhatsAppஐ ‘WhatsApp Gold’ ஆக மாற்றுங்கள் என்று ஒரு தகவல் பரவி வருகிறது.

இணையத்தில் தகவல்களை திருடும் ஹேக்கர்கள் பல முறைகளை பயன்படுத்தி வருகின்றனர். தற்போது அவர்கள்‘WhatsApp Gold’ என்னும் முறை மூலம் WhatsApp பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை திருடும் முயற்சியில் இறங்கி உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

பிரபலங்கள் மட்டுமே பயன்படுத்தும் ’WhatsApp Gold’ தற்போது அனைராலும் பயன்படுத்த முடியும் என்ற தகவலோடு ஒரு மெசேஜ் WhatsAppல் வேகமாக பரவி வருகிறது.


உங்களது WhatsAppஐ ‘WhatsApp Gold’ ஆக மேம்படுத்திக் கொள்ள ஒரு இணையத்தளமும் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த இணையதளம் செயல்படவில்லை.

இதனால் இது WhatsApp பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை ஹேக்கர்களின் திருடும் முயற்சியாக கருதப்படுகிறது. எனவே உங்களது நண்பர்களும் உங்களுக்கு இந்த மெசேஜை அனுப்பினால் உஷாராக இருந்து கொள்ளுங்கள்.