YouTube Live 360 எனும் புதியவசதி

கூகுளைதாய் நிறுவனமாக கொண்டு செயற்படும் யூடியூப் நிறுவனமானது முன்னணி வீடியோ பகிரும் தளமாக விளங்குகின்றது. இந் நிறுவனம் கடந்த வாரம் YouTube Live 360 எனும் புதியவசதியினை பயனர்களுக்காக அறிமுகம் செய்திருந்தது. இவ் வசதியின் ஊடாக எந்தவொரு நிகழ்ச்சியையும் 360 டிகிரியில் பார்த்து மகிழ முடியும். இப் புதிய வசதியில் பொப்பாடகி டவுனின் நேரடி இசைநிகழ்ச்சி ஒன்று முதன் முறையாகப திவேற்றம் செய்யப்பட்டுள்ளது. சுமார்30 நிமிடங்கள் வரை ஓடக்கூடிய இந்த வீடியோவினை மவுஸின் உதவியுடன் 360 டிகிரியில் சுழற்றி பார்க்க முடியும். இதற்கு பிரத்தியேகமான கணணி வன்பொருட்களோ, மென்பொருட்களோஅல்லது Virtual Reality ஹெட்செட்களோ தேவையில்லை. அனைத்து வகையான கணணிகளிலும் இவ் வசதியினைப் பெற்றுக்கொள்ளமுடியும்