Showing posts with label காதல். Show all posts
காதல் நோயின் அறிகுறிகள் என்ன?
காதலில் வீழ்வது என்பது ஒருவித ரசாயன விவகாரம். அது நம் மனித ஜீவராசியின் இனவிருத்தியை உத்தரவாதப்படுத்தும் வகையில் உடலில் தொடர்ச்சியான பலவித ரசாயன மாற்றங்களை உண்டுபண்ணுகிறது என்கின்றனர் அறிவியலாளர்கள்.
வியாதியை ஒத்ததுதான் காதல் ( காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி மாலை மலரும் இந்நோய், ஞாபகம் வருகிறதா? ). எனவே, ஒரு நோய் ஏற்பட்டால் என்ன விதமான அறிகுறிகள் உடலில் தோன்றுமோ அதே போல, தெளிவாகத் தெரியும் உடல் ரீதியான அறிகுறிகள் காதல் நோயாலும் ஏற்படும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.
இந்த அறிகுறிகள் என்ன ?
வியர்க்கும் கைகள், பசியின்மை ( "பாலுங்கசந்ததடி சகியே படுக்கை நொந்ததடி" ), முகம் உணர்ச்சிப்பெருக்கில் உப்புவது, இதயத்துடிப்பு அதிகமாதல் போன்றவை இவை .
காதலுக்கு பல கட்டங்கள் உண்டு. ஒவ்வொரு கட்டமும் ஒருவிதமான ரசாயனப் பொருட்களால் தூண்டப்படும் உடல் ரீதியான மாற்றங்களால் ஆட்டுவிக்கப்படுகின்றது.
முதலில் காமம் தோன்றும் ஒரு கட்டம் - இது அடிப்படையான பாலியல் ரீதியான ஒரு வேகம்.
இது ஈர்ப்பு நிலைக்கு இட்டுச் சென்று பின்னர் உணர்வு ரீதியாக ஒன்று சேரும் நிலைக்கும் பின்னர் அதுவே நீண்ட கால உறவுக்கும் வழி வகுக்கிறது.
ஆனால், இவை எல்லாம் ஒரு குறிப்பிட்ட வரிசைக் கிரமத்தில் வரவேண்டியதில்லை என்கிறார் ஆராய்ச்சியாளர் ஹெலன் ஃபிஷர். இவர் அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் உள்ள ரட்ஜர்ஸ் பல்கலைக்கழகத்தில் பணிபுரிகிறார்.
"உங்கள் அலுவலகத்தில் வேலை பார்க்கும் சகாவுடனோ அல்லது கல்லூரியிலோ அல்லது உங்கள் சமூக வட்டத்தில் இருப்பவர் ஒருவருடனோ உங்களுக்கு ஏற்படும் ஒரு வித ஆழமான பற்றை , நேசத்தை நீங்கள் உணரலாம். இது மாதங்கள் அல்லது சில ஆண்டுகளுக்குப் பின்னர், மேலும் கனிந்து மாற்றம் பெற்றும் திடீரென நீங்கள் அவர் மீது காதல் வயப்படுவீர்கள்" என்று ஃபிஷர் பிபிசியிடம் கூறினார்.எனவே பற்று முதலில் வருகிறது. அதன் பின்னர் மிகவும் ஆழமான காதல் , பின்னர் பாலியல் வேகத்துடன் தொடர்புள்ள உணர்வுகள் .... அல்லது நீங்கள் ஒருவரால் பாலியல் ரீதியாகக் கவரப்படலாம், அவர் மீது அதற்கு பின்னர் காதல் ஏற்படலாம், அதன் பின்னர் அவர் மீது ஆழமான பற்று அல்லது உணர்வுகள் ஏற்படலாம்.... அல்லது முதலில் ஒருவருடன் பாலியல் உறவு கொள்வதற்கு முன்னரேயே அவர் மீது நீங்கள் கண்மூடித்தனமாகக் காதல் கொள்ளலாம்" என்கிறார் அவர்.
இந்த ஒவ்வொரு கட்டத்திலும், ஒவ்வொருவிதமான ரசாயனப் பொருட்கள் உடலில் மாற்றங்களை ஏற்படுத்துவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
காதல் படிகள் !
காமம்:
காமம் என்பது செக்ஸ் ஹார்மோன்களான டெஸ்டொஸ்டீரோன் (testosterone) மற்றும் ஈஸ்ட்ரோஜென் (oestrogen) போன்றவற்றால் உந்தப்படுகிறது. டெஸ்டொஸ்டீரோன் என்ற ஹார்மோன் ஆண்களுக்கு மட்டும் சொந்தமானது அல்ல. அது பெண்களின் பாலியல் உணர்வுகளிலும் பெரும் பங்கு வகிப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
ஈர்ப்பு:
இந்தக் கட்டம் காதலில் வீழ்ந்து மற்ற எல்ல விஷயங்களையும் காதலர்களால் சிந்திக்கக்கூட முடியாத நிலை. அவர்கள் உண்மையில் பசியை இழப்பார்கள். தூக்கம் தேவைப்படாது. தங்கள் காதலரைப் பற்றியே பகல் கனவு கண்டு கொண்டிருப்பார்கள்.
இந்த ஈர்ப்பு கட்டத்தில் "மோனோமைன்கள்" (monoamines) என்றறியப்படும் நரம்புகள் மூலம் செய்திகளைச் சொல்லும் ஹார்மோன்கள் முக்கிய பங்காற்றுகின்றன.டோபோமைன் (Dopamine) இது ஒரு வகை ரசாயனம். இது கோக்கெயின் மற்றும் நிக்கோட்டினோரெபின்ப்ரின் என்றவைகளால் தூண்டப்படுகிறது. இதற்கு அட்ரினலின் என்ற மற்றொரு பெயரும் உண்டு. இதுதான் காதலர்கள் உடலில் வியர்வையை உருவாக்குவது, இதயத்தை படபடக்கச் செய்வது போன்ற வேலைகளைச் செய்யும் பொருள்.
செரொட்டோனின் என்ற மற்றொரு ரசாயனம் காதல் விவகாரத்தை ஏற்படுத்தும் ரசாயனங்களில் மிகவும் முக்கியமானது. இதுதான் காதல் வயப்பட்டவர்களை தற்காலிகமாக பைத்திய நிலைக்குத் தள்ளும் வில்லன் !
பற்று, பாசம்:
இந்த கட்டம் ஈர்ப்புக் கட்டத்துக்கு அடுத்து ஏற்படுவது. அந்த உறவு நீடிக்கவேண்டுமென்றால் இந்த பற்று மிகவும் அவசியம். ஈர்ப்பு நிலை தொடர்ந்து நீடித்துக்கொண்டே இருந்தால், குழந்தைகளைத் தவிர வேறொன்றும் உற்பத்தி ஆகாது!இந்த "பற்று" கட்டத்தில், இரண்டு ஹார்மோன்கள் உடலில் சுரக்கின்றன. நரம்பு மண்டலத்தில் சுரக்கும் இந்த இரு ஹார்மோன்கள் சமூகப் பற்றை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றுகின்றன.
இது தவிர வேறு இரண்டு ரசாயனன்கள் உடலில் விளையாடுகின்றன.
வேசோப்ரெஸ்ஸின் (Vasopressin):
நீண்ட கால உறவு என்ற கட்டத்தில் ஒரு முக்கிய ரசாயனம் இது. இந்த ரசாயனம் ஆண்களால் அடக்கப்படும்போது, காதலர்களுக்கிடையே நிலவும் பந்தம் உடனடியாகக் குறைகிறது.
விசுவாசம் இழப்பது, துணைவரை( அல்லது துணைவியை) புதிய காதலர்களிடமிருந்து பாதுகாக்கத் தவறுவது போன்றவை இதனால் ஏற்படுகின்றன.ஆக்ஸிடோசின் (Oxytocin) என்ற இந்த ரசாயனம் ஹைபொதலாமஸ் என்ற சுரப்பியால் வெளியிடப்படுகிறது. இது குழந்தைப் பேறு காலத்தின் போது சுரக்கிறது. இதுதான் தாய்ப்பால் உருவாக உதவுகிறது. இது தாய்க்கும் குழந்தைக்கும் இடையே ஒரு பந்தம், பிணைப்பு ஏற்பட உதவுகிறது.
இது காதலர்கள் அல்லது தம்பதியர் இருவர் உடலுறவு கொள்ளும்போது ஏற்படும் "பாலியல் உச்சகட்ட" நிலையிலும் வெளியாகிறது. இதுதான் வயது வந்தவர்களுக்கு இடையே பிணைப்பு ஏற்பட உதவுவதாகக் கருதப்படுகிறது.
அதிகம் உடலுறவு கொள்ளக் கொள்ள, தம்பதியருக்கிடையே பிணைப்பு ஆழமாகிறது என்கிறது இந்தக் கருத்தாக்கம் !
"ஆதலினார் காதல் செய்வீர் உலகத்தீரே", எனலாமா ?

பெண்கள் உங்கள் மீது காதல்வயப்பட்டால் எப்படி நடந்து கொள்வார்கள் தெரியுமா?
உங்களை பிடித்திருக்கிறது என்பதை ஈஸியாக கண்டறிய ஒரு சில அறிகுறிகள் இருக்கின்றன

காமுகர்கள் சமூக வலைத்தளங்களை பாவித்து எப்படி சிறுமிகளை தந்திரமாக பிடிக்கின்றனர்?
காமுகர்கள் சமூக வலைத்தளங்களை பாவித்து எப்படி சிறுமிகளை தந்திரமாக பிடிக்கின்றனர் 15 வயதை உடைய போலியான முக நூல் கணக்கை ஆரம்பித்து இந்த கணக்கின் ஊடாக 3 சிறுமிகளை தொடர்பு கொண்டு இதனை அவர்களது பெறோருக்கு தெரியபடுத்தி 4 நாட்கள் அவர்களுடன் போலியான முக நூல் கணக்கின் ஊடாக தொடர்பில் இருந்து இன்று அவர்களை நேரடியாக சந்தித்து உண்மையை உணர்த்த படுகிறது இந்த காணொளி பலருக்கு உண்மையை உணர்த்தவும் விழிபுணர்வு ஏற்படுத்தவும் உதவும் காணொளி பாருங்கள் உங்கள் பிள்ளைகளை இப்படிபட்ட காமுகர்கள்ளிடம் இருந்து பாது காருங்கள்
எண்ணத்தின் வலிமை
தமிழில் தோன்றிய தத்துவஞானி யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி
அவர்கள் அருளியது
எண்ணத்தின் அளவையொட்டியே மனதின் தரமும், உயர்வும் அமைகின்றன. மனதின் அளவில்தான் மனிதனின் தரமும், உயர்வும் உருவாகின்றன. எனவே, எண்ணத்தைப் பண்படுத்த வேண்டும். எண்ணத்திற்கு உயர்வூட்ட வேண்டும். எப்படி? எண்ணத்தைக் கொண்டு தான் எண்ணத்தைப் பண்படுத்த வேண்டும். எண்ணத்தின் தன்மையைப் பயன்படுத்தித் தான் எண்ணத்திற்கு உயர்வூட்ட வேண்டும்.
தூய்மையான நல் எண்ணங்களை மேற்கொண்டால் உங்களிடமிருந்து இனிய அதிர்வுகள் புறப்பட்டு வெளியேறிப் பரவுகின்றன. அதே போன்று நீங்கள் ஒருவரை வாழ்த்த நினைக்கும் பொழுது உங்களை அறியாமல் நீங்களே முதலில் உங்களால் வாழ்த்தப் படுகின்றீர்கள்! வாழ்த்து உங்கள் மனதில் ஆழப் பதிந்து விடுகின்றது.
அதுபோலவே நீங்கள் ஒருவருக்குத் தீமை நினைத்துச் சபிக்கும் பொழுது முதலில் உங்களை நீங்களே கெடுவதற்குச் சபித்துச் கொள்கிறீர்கள். உங்களிடம் முதலில் தீமை வித்து உங்களிடம் ஊன்றிப் பிறகு மற்றவர்களுக்குப் பருவுகின்றது. இதை நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.
இதற்கு உதாரணமாகக் கோபம் ஏற்படும் போது உண்டாகும் நிலையினைச் சொல்லலாம். கோபம் முதலில் உங்கள் உடலுக்கும், மனதிற்கும் பாதிப்புச் செய்துவிட்டுத் தான் மற்றவரைச் சென்று தாக்கும் என்பதை நீங்கள் அனுபவத்தில் உணர்ந்திருக்கலாம்.
நீங்கள் மற்றவர்களை வாழ்த்த ஆரம்பிக்கும்பொழுது நல்ல அலைகளை ஏற்படுத்தி உங்கள் குணத்தை வளப்படுத்துகிறீர்கள். உங்களுடைய வாழ்த்து மற்றவரிடம் மோதித் திரும்புகிறது. சிதறுகிறது, ஊடுருவிச் செல்கிறது.
நீங்கள் யாரை வாழ்த்துகிறீர்களோ அவரை முடிவில் சென்றடைகிறது. இந்த முறையில் வாழ்த்து உங்களுக்கும் நீங்கள் வாழ்த்துகின்ற மனிதருக்கும் இடையே மட்டுமல்லாமல் அந்த இனிமையான அலைகள் மனித சமுதாய முழுதும் பரவுகின்றன. பேரியக்க மண்டலம் முழுதும் அனைத்துப் பக்கங்களிலும் சென்று நிரம்புகின்றன.
எண்ணம் வேறு, நீ வேறு அல்ல, சிந்தித்துப் பார், அது காலம், இடம், பருமன், இயக்கம் என்ற நான்கு விதத் தன்மைகளோடு இயங்கிக் கொண்டும், அவற்றைக் கடந்து மெளன நிலையடைந்தும் மாறி மாறி நிற்கும் மாயாஜாலப் பொருள். உள் எண்ணத்தின் நிலையை அறிந்து கொண்டால் நீ உன்னை அறிந்து கொண்டாய் என்பது தான் பொருள். அது வரையில் சந்தர்ப்பங் கிடைக்கும்போதெல்லாம் எண்ணத்தைப் பற்றி ஆராய்ந்து கொண்டே இரு. எண்ணத்தை நிறுத்த முயலாதே, அது அதிகமாக அலையும், அதை அறிய முயன்றால், அப்போதுதான், அது தானே சிறுகக் சிறுக அமைதி பெறும்.
எண்ண இயக்கம் தான் வாழ்வு. அது உடலில் இரத்த ஓட்டம் இருக்கும் மட்டும், நித்திரை காலம் தவிர மீதி நேரத்தில் இயங்கிக் கொண்டே தான் இருக்கும். எண்ணத்தைப் பண்படுத்தவும் பயன்படுத்தவும் வழிகாண வேண்டும், பழக வேண்டும். அந்தப் பெருநிதியை அழிக்க வேண்டுமென்று நீ வீணான முயற்சி கொள்ளாதே! அதுதான் மரணம் என்ற இடத்தில் தானாகவே நின்று விடப் போகின்றதே! எண்ணம் நின்று விட்டால் நீ என்பது தனித்து ஏது?
பல வருடங்களில் எண்ணிறந்தோர்களால் செய்து முடிக்கக் கூடிய காரியங்களை நீ ஒரு நிமிஷத்தில் எண்ணத்தால் திட்டமிடலாம். இத்தகைய சக்தியுடைய நீ எப்போதுமே எதிர்காலத்தைப் பற்றி திட்டமிட்டுக் கொண்டிருக்காதே. இதனால் அவ்வப்போது செய்ய வேண்டிய கடமைகளை மறந்து விடுவாய். செயலோடு சிந்தனையை இணைத்து நிற்பதே மிகவும் உயர்வாகும். அது நழுவாமல் இருப்பதற்கு விழிப்போடு பல நாட்கள் பழக வேண்டும். உனது உடல் இன்பங்களையும், குடும்பத்தையும் மட்டும் ஞாபகத்தில் கொண்டு செயலாற்றினால், உனக்கு வாழ்வில் சலிப்பும், துன்பங்களும் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும்.
இயற்கை அமைப்பை, நிகழ்ச்சிகளை, எண்ணத்தின் ஆற்றலை, சமுதாயத்தை, உலகத்தை, ஆகாயத்தில் மிதந்து உலவிக் கொண்டிருக்கும் பலகோடி அண்டங்களை அடிக்கடி ஞாபகப்படுத்திக் கொள். இவைகளோடு உனது அறிவை, இன்ப துன்ப அனுபோகங்களை அடிக்கடி ஒப்பிட்டுப் பார். இதனால், உடலுக்கும், அறிவுக்கும் ஒருங்கே அமைதி தரும் இடையறாத இன்ப ஊற்றுப் பெருக ஆரம்பித்து விடும்.–
யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி
அழகிய கண்கவர் அனிமேஷன்னுடன் கூடிய chirst mas வாழ்த்து அட்டைகள்
அழகிய கண்கவர் அனிமேஷன்னுடன் கூடிய chirst mas வாழ்த்து அட்டைகள் அனுப்ப மிகவும் அருமையான ஒருதளம் உள்ளது. இதில் காதல் ,நன்றி ,பிறந்தநாள் வாழ்த்துகள்,சமயம் சர்ந்த வாழ்த்துகள் ,அனுதின வாழ்த்துகள். உங்களது திருமணஅழைப்பிதழ், விருதுகள் பற்றிய அறிவிப்பு, என பல வசதிகள் உள்ளது உங்கழுக்கு தேவை யானதை தெரிவு செய்து உங்களது நண்பர்கட்கு அனுப்பி மகிழுங்கள். இங்கே
என் வலைப்பூவில் வருகை தரும்
வாசகர்களுக்கு பிறக்கும் இயேசு பாலன்
உங்கள் இல்லங்களிலும்,
உள்ளங்களிலும் நிறை ஆசீரும்
அருளும் வழங்குவாராக.
உங்கள் அனைவருக்கும் எனது நத்தார் வாழ்த்துக்கள்.
Subscribe to:
Posts
(
Atom
)