Showing posts with label அப்துல்கலாம். Show all posts
தமிழ் உலகின் பழமையான மொழி
’தமிழ்’என்னும் சொல்லின் பொருள் இனிமை, எளிமை, நீர்மை என்பதாகும். உலகின் பழமையான மொழிகள் மொத்தம் ஏழு, அதில் மூன்று தான் தற்போது வழக்கில் உள்ளது. அதில் ஒன்று தான் தமிழ்!. உலக மொழிகள் பலவற்றுக்கு எழுத்து, சொல், யாப்பு, அணி ஆகியன உண்டு, ஆனால் தமிழ் மொழிக்கு மட்டும்தான் பொருளுக்கு இலக்கணம் உண்டு. ஆகையால்தான் தமிழை ஐந்திலக்கணம் என்கிறார்கள். இந்திய நாட்டில் கிடைத்துள்ள ஏறத்தாழ ஒரு லட்சம் கல்வெட்டு பதிவுகளில், அறுபதாயித்துக்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் தமிழ் எழுத்துகளால் பொறிக்கப்பட்டவைகள் ஆகும். தமிழில் 3 இனங்கள் உண்டு. அவை முறையே வல்லினம், மெல்லினம், இடையினம் ஆகும். தமிழில் திருக்குறள் எனும் உயரிய நூல் தோன்றி 2000 ஆண்டுகளுக்கு மேல் ஆகின்றது. அப்படியானால் இம்மொழி தோன்றி குறைந்தது 10,000 ஆண்டுகளாகியிருக்க வேண்டும் என்பது மொழி ஆய்வாளர்களின் கருத்து. இணையத்திலும் இன்று அதிகம் பயன்படுத்தப்படும் மொழிகளுள் தமிழ் இருக்கிறது. தமிழ் எழுத்துக்கள் மூலம் எண்களும் எழுதப்பட்டன. ஆங்கிலத்தில் கோடிக்கு மேல் குறிப்பிட தனி சொற்கள் கிடையாது. பத்து கோடி, நூறு கோடி என சொல்ல வேண்டும். ஆனால் தமிழில் இதை பிரமகற்பம் என சொல்ல முடியும். உலகில் இந்தியா, மலேசியா,சிங்கபூர் போன்ற நாடுகளில் அதிகம் பேசப்படும் தமிழ் மொழி இலங்கை நாட்டின் நாடாளுமன்ற மொழியாகவும் இருப்பது கூடுதல் சிறப்பாகும்.
உண்மையில் வைத்தியர்களா? அல்லது கசாப்பு கடைகாரரா?

இந்தப் பதிவானது அனைத்துத் தமிழனும் வாசிக்க வேண்டியதொன்று ''இந்திய மதிய அரசு இலங்கைக்கு இராணுவ உதவி எதுவும் செய்யவில்லை. தமிழருக்கு மனிதாபிமான மருத்துவ உதவி மட்டுமே செய்தது'' . இக்கூற்றை பல அப்பாவி தமிழர்கள் நம்பினர். இது உண்மையா?
இராணுவத்தினர் வன்னி நோக்கி மூர்க்கத்தனமாக தாக்கி கொண்டு செல்லும் போது, புலிகள் இரணைமடுக் குளத்தின் அணையை உடைத்து இராணுவத்தினருக்கு பலத்த உயிர் சேதம் ஏற்படுத்தியது; அனைவரும் அறிந்ததே! இதில் பல நாட்டு இராணுவத்தினரும் இறந்தனர் என்பது இரகசிமல்ல, பல இந்திய இராணுவத்தினரும் கொல்லபட்டன்ர். இதனால் கோபம் அடைந்த இந்திய மதிய அரசு யாருமே செய்ய துணியாத ஒரு கிழ்த்தரமான இன அழிப்பை தமிழர் மீது கட்டவிழ்த்து விட்டது. திருகோணமலை கடற்படைத்தளத்தில் வந்திறங்கிய ஒரு தொகுதி இந்திய இராணுவ மருத்துவர்கள் மக்களுக்கு மனிதாபிமான மருத்துவ உதவி செய்வதற்காக வந்ததாக சொல்லபட்டது.அதை நம்பி சென்றவர்களின் கைகள்,கால்கள் வெட்டி அகற்றிவிட்டனர். இப்படியாக கணிசமாணவர்களை ஊனமாக்கியது இந்திய இராணுவ மருத்துவர்கள். இவர்கள் உண்மையில் வைத்தியர்களா? அல்லது கசாப்பு கடைகாரரா?(ஒய் திஸ் கொல வெறி?) இப்படியாக பல வகையிலும் தமிழ் இன அழிப்புக்கு துணை நின்றதுடன் போர் குற்ற வழக்கை இலங்கைக்கு உள்ளே நடத்தும் படி சொல்வதுடன் இலங்கை அரசுடன் ஒத்துழைக்கும் படி தமிழ் தேசிய கூட்டமைப்பை வற்புறுத்தி வருகின்றது.
புலிகளை ஒழித்து விட்டால் தமிழர்கள் போராட மாட்டார்கள் என கனவு கண்ட சர்வதேசம் புலம் பெயர் தமிழர் எழுற்ச்சியுடன் முன்னெடுக்கும் போராடம் கண்டு அதிர்ச்சி அடைந்ததுடன், இந்த எழுற்சியை குறைக்க இந்திய, அமெரிக்க மற்றும் மேற்குலக அரசுகள் மறுபடியும் ஒன்று சேர்ந்து சதித்திட்டம் வகுக்க தொடங்கிவிட்டனர். அதன் அறிகுறியே அடுக்கடுக்காக இலங்கைக்கு செல்வதும், இலங்கை அரசை எதிர்த்து அறிக்கை விடுவது. உறுதிமொழி. வழங்குவது என தொடர்கிறது . நல்ல உதாரணம் : கொலைஞர் தமிழகத்தில் அரை நாள் உண்ணாவிரதம் என தமிழரை நம்பவைத்து ஏமாற்றியது. தமிழர் எளிதில் மறந்து இருக்க மாட்டார்கள். இதே பாணியில் இந்திய, அமெரிக்க மற்றும் மேற்குலக அரசுகள் களம் இறங்கியுள்ளது .பல வருடங்களாக நம்பி ஏமாந்தது போதும்.எமக்கு நீதி கிடைக்கும் வரை ஒற்றுமையுடன் மிகுந்த விழிப்பாக போராடுவது ஒவொரு தமிழனின் கைகளில் தங்கியுள்ளது.
ஹ ஹ யார் அந்த சிங்க சொங்?
படத்தை பாருங்கள் பதில் புரியும்
Subscribe to:
Posts
(
Atom
)