Showing posts with label : Catholic. Show all posts

நம் இயேசுவின் கனவு


நம்மை குறித்து நம் தேவனின் கனவு

இயேசு ஒரு புரட்சியாளரா, போதகரா

இயேசு ஒரு புரட்சியாளரா,  போதகரா அனல் பறக்கும் விவாதம் 

ஒடுக்கப்பட்ட நிலை உன்னைவிட்டு அகன்றுபோம்

உன் கடவுளும் ஆண்டவருமான நான், நீ செல்லும் இடம் எல்லாம் உன்னோடு இருப்பேன் - யோசு 1:9.

    நான் உனக்கு வலிமை அளிப்பேன் - எசா 41:10.
    உன்னை உருவாக்கிய நானே, உன்னைத் தாங்குவேன் - எசா 46:4.
    நான் உன்னை கட்டி எழுப்புவேனேயன்றி, அழித்தொழிக்கமாட்டேன் - எரே 42:10.
    இன்று முதல், நான் உனக்கு ஆசி வழங்குவேன் - ஆகா 2:19.
    ஏழையானதால் அஞ்சாதே! நீ பெரும் செல்வனாவாய் - தோபி 4:21.
    உன் கண்ணீரின் நாட்கள் முடிந்து போகும் - எசா 60:20.
    ஆண்டவர், உன் துயரத்தை மகிழ்ச்சியாக மாற்றுவார் - தோபி 7:16.
    ஒடுக்கப்பட்ட நிலை உன்னைவிட்டு அகன்றுபோம் - எசா 54:14.
    துன்பத்திற்கு பதிலாக, இன்பத்தை அருள்வேன் - எரே 31:13.
    அவர் உம் கால் இடறாதபடி பார்த்துக்கொள்வார்; உம்மைக் காக்கும் அவர் உறங்கி விட மாட்டார் - திபா 121 :3.
    அவர் உம் கால் இடறாதபடி பார்த்துக்கொள்வார்; உம்மைக் காக்கும் அவர் உறங்கி விட மாட்டார் - திபா 121 :3.


    இதோ! இஸ்ராயேலைக் காக்கின்றவர் கண்ணயர்வதுமில்லை; உறங்குவதும் இல்லை - திபா 121 :4.

    ஆண்டவரே உம்மைக் காக்கின்றார்; அவர் உம் வலப்பக்கத்தில் உள்ளார்; அவரே உமக்கு நிழல் ஆவார் - திபா 121 :5

    பகலில் கதிரவன் உம்மைத் தாக்காது; இரவில் நிலாவும் உம்மைத் தீண்டாது - திபா 121 :6.

    ஆண்டவர் உம்மை எல்லாத் தீமையினின்றும் பாதுகாப்பார்; அவர் உம் உயிரைக் காத்திடுவார் - திபா 121 :7.

    நீர் போகும்போதும், உள்ளே வரும்போதும், இப்போதும் எப்போதும் ஆண்டவர் உம்மைக் காத்தருள்வார் - திபா 121 :8.

தேவனே, நான் உமதண்டையில் - இன்னும் நெருங்கிச் சேர்வதே என் ஆவல் பூமியில்

தேவனே, நான் உமதண்டையில் - இன்னும் நெருங்கிச்
சேர்வதே என் ஆவல் பூமியில்.

மாவலிய கோரமாக வன் சிலுவை மீதினில் நான்

கோவே, தொங்க நேரிடினும்
ஆவலாய் உம்மண்டை சேர்வேன்

யாக்கோபைப்போல், போகும் பாதையில் - பொழுது பட்டு
இராவில் இருள் வந்து மூடிட

தூக்கத்தால் நான் சாய்ந்து தூங்கினாலும் என் கனாவில்

நோக்கியும்மை கிட்டிச் சேர்வேன், வாக்கடங்கா நல்ல நாதா!

பரத்துக்கேறும் படிகள் போலவே – என் பாதை தோன்றப்

பண்ணும் ஐயா, என்றன் தேவனே,
கிருபையாக நீர் எனக்குத் தருவதெல்லாம் உமதண்டை
அருமையாய் என்னையழைத்து அன்பின் தூதனாகச் செய்யும்

. நித்திரையினின்று விழித்துக் - காலை எழுந்து

கர்த்தாவே, நான் உம்மைப் போற்றுவேன்;

இத்தரையில் உந்தன் வீடாய் என்துயர்க் கல் நாட்டுவேனே,
என்றன் துன்பத்தின் வழியாய் இன்னும் உம்மைக் கிட்டிச் சேர்வேன்

. ஆனந்தமாம் செட்டை விரித்துப் - பரவசமாய்
ஆகாயத்தில் ஏறிப் போயினும்
வான மண்டலங் கடந்து பறந்து மேலே சென்றிடினும்
மகிழ்வுறு காலத்திலும் நான் மருவியும்மைக் கிட்டிச் சேர்வேன்.

உலகத்தின் பாவ சுமைகளை சுமந்த என் இயேசுவே

காயங்கள் காயங்கள் இயேசுவின் உடலில் 
உட்காயங்கள் வெளிகாயங்கள் இயேசுவின் உடலில் 
கசையடிகளும் பாய்ந்து ஓடும் இரத்தமும் இயேசுவின் உடலில் 
உலகத்தின் பாவ சுமைகளை சுமந்த என் இயேசுவே 
அன்பினால் வேதனை காண சுமை சுமந்த இயேசுவே

வசதி வரும் போது கடவுளை மறக்காதே

  • ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு எனும் உன் மூதாதையருக்கு கொடுப்பதாக, ஆணையிட்டுக் கூறிய நாட்டுக்குள், உன் கடவுளாகிய ஆண்டவர், உன்னைப் புகச் செய்யும் போதும், நீ கட்டி எழுப்பாத பரந்த வசதியான நகர்களையும்,
  • நீ நிரப்பாத எல்லா செல்வங்களால் நிறைந்த வீடுகளையும், நீ வெட்டாத பாறைக் கிணறுகளையும், நீ நடாத திராட்சைத் தோட்டங்களையும், ஒலிவத் தோப்புகளையும், அவர் உனக்குக் கொடுக்கும் போதும், நீ உண்டு நிறைவு கொள்ளும் போதும்,
  • அடிமைத்தன வீடாகிய, எகிப்து நாட்டினின்று, உன்னை வெளியே கூட்டி வந்த, ஆண்டவரை மறந்து விடாதபடி, கவனமாய் இரு - இ.ச 6:10-12.

  • இன்று, நான் உங்களுக்கு கட்டளையிடுகின்ற கட்டளைகள், நியமங்கள், முறைமைகள், ஆகியவற்றினின்று, வழுவியதன் மூலம், உங்கள் கடவுளாகிய ஆண்டவரை, மறந்து போகாதபடி, கவனமாய் இருங்கள் - இ.ச 8:11.

  • நீங்கள் உண்டு நிறைவு கொள்ளும் போதும், அழகிய வீடுகளை கட்டி, அவைகளில் குடியிருக்கும் போதும்,
  • உங்கள் ஆடு மாடுகள் பலுகும் போதும், வெள்ளியும் பொன்னும், உங்களுக்கு மிகுதியாகும் போதும், உங்களுக்கு உள்ளதெல்லாம் பெருகும் போதும்,
  • நீங்கள் நெஞ்சில் செருக்குற்று, அடிமைத்தனத்தின் வீடாகிய, எகிப்து நாட்டிலிருந்து, உங்களை கூட்டி வந்த, உங்கள் கடவுளாகிய ஆண்டவரை மறந்து விட வேண்டாம் - இ.ச 8: 12-14.

  • அவரே, கொள்ளிவாய்ப் பாம்புகளும், தேள்களும் நிறைந்த, நீரற்று, வறண்ட நிலமான, பரந்த கொடிய பாலைநிலத்தில் உங்களை வழிநடத்தியவர். இறுகிய பாறையிலிருந்து, உங்களுக்காக, நீரைப் புறப்படச் செய்தவர் - இ.ச 8:15.
  • உங்கள், மூதாதையருக்கு தெரிந்திராத மன்னாவால், பாலைநிலத்தில் உங்களை, உண்பித்தவர், இறுதியில் உங்களுக்கு நல்லது செய்வதற்காக, உங்களை எளியவராக்கி, சிறுமைப்படுத்தி, சோதித்தவரும் அவரே - இ.ச 8:16.
  • எனவே, எங்கள் ஆற்றலும், எங்கள் கைகளின் வலிமையுமே, இந்த செல்வங்களை எங்களுக்கு ஈட்டித் தந்தன என்று, உங்கள் உள்ளங்களில் எண்ணாதபடி, கவனமாய் இருங்கள் - இ.ச 8:17.

  • உங்கள் மூதாதையருடன் ஆணையிட்டு செய்து கொண்ட உடன்படிக்கையை உறுதிப்படுத்துமாறு, இந்நாளில் இருப்பது போன்ற, செல்வங்களை ஈட்ட வல்ல, ஆற்றலை உங்களுக்கு அளித்த, உங்கள் கடவுளாகிய ஆண்டவரை, நினைவில் கொள்ளுங்கள் - இ.ச 8:18. 
  • நன்றி http://www.catholicpentecostmission.in/kathampam.html

யாழ் டிவைன் தியான இல்லம் வழங்கும் குணமளிக்கும் ஆராதனை

 யாழ் டிவைன் தியான இல்லம்  வழங்கும்  குணமளிக்கும்  ஆராதனை