மஹிந்த ராஜபக்ஷ கௌதம புத்தரின் பரம்பரை வழி உறவினர்!!!!!

.மஹிந்த ராஜபக்ஷ துட்டகைமுனு மன்னனின் பரம்பரை வாரிசு மட்டுமன்றி கௌதம புத்தரின் பரம்பரை வழி உறவினருமாவார் என்று பிரபல சிங்கள கலைஞர் ஜெக்சன் அண்டனி தெரிவித்துள்ளார்.
இலங்கை முழுவதும் சிங்கள மக்களுக்கே உரியது என்றும், இலங்கையின் அனைத்துப் பாகங்களிலும் முற்காலத்தில் சிங்கள மக்களும் பௌத்த தேரர்களும் பரவி வாழ்ந்ததாக நிரூபிக்கும் ஊடக ஆய்வு நடவடிக்கையை ஜெக்சன்
அண்டனியிடம் ஒப்படைக்குமளவுக்கு அவர் ஜனாதிபதிக்கு மிகவும் நெருக்கமான ஒரு கலைஞராவார்.
அவர் இலங்கையின் ஆரம்ப கால வரலாறு பற்றி தொலைக்காட்சியில் நடாத்திவரும் நிகழ்ச்சியின் திரைக்கதைப் பிரதி ஜனாதிபதி செயலகத்திலிருந்தே தயாரித்துக் கொடுக்கப்படுகின்றது.
அவ்வாறான ஒரு நிகழ்ச்சியின் போதே அவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ துட்டகைமுனு மன்னனின் வாரிசு மட்டுமன்றி, கௌதம புத்தரின் பரம்பரை வழி உறவினருமாவார் என்றும் அவர் தன் கண்டுபிடிப்பின் அடிப்படையில் கருத்து வெளியிட்டிருந்தார்.
அவரது கண்டுபிடிப்பின் பிரகாரம் கௌதம புத்தர் தொட்டு மஹிந்த வரையான பரம்பரை வழித்தொடர் பின்வருமாறு அமைகின்றது.
கௌதம  புத்தரின் தகப்பனார் - சுத்தோதன
சுத்தோதனவின் சகோதரர் - அமிதோதன
அமிதோதனவின் மகன் - பண்டுசாக்கிய
பண்டுசாக்கியவின் மகள் - பத்த கச்சானா
பத்தகச்சானா இலங்கை வந்து பண்டுவஸ்தெவி அரசரை மணக்கின்றார்.
அவர்களின் குழந்தை உன்மாத சித்ரா வாகும்.
உன்மாத சித்ராவின் மகன் - பண்டுகாபய
பண்டுகாபயவின் மகன் - முட்டசீவ
முட்டசீவவின் மகன் - தேவானம்பியதிஸ்ஸ
தேவானம்பியதிஸ்ஸவின் சகோதரன் மகாநாக வாகும்.அவர் தான் ருஹுணையில் புதியதொரு இராசதானியை உருவாக்கியவராவார்.
மகாநாகவின் சகோதரன் - யடாலதிஸ்ஸ
யடாலதிஸ்ஸவின் சகோதரன் - கோட்டாபய
கோட்டாபயவின் மகன் - காவன்திஸ்ஸ
காவன்திஸ்ஸவின் மகன் - துட்டகைமுனு
அதன் பின்பு துட்டகைமுனு தொடக்கம் ராஜபக்ஷ பரம்பரை வரையான சங்கிலித்தொடரை ஜெக்சன் அண்டனி விளக்கவில்லை. ஆயினும் துட்டகைமுனுவின் பின் இலங்கையை ஒரே குடையின் கீழ்  கொண்டுவந்தவர் மஹிந்த ராஜபக்ஷ என்றும் அவர் துட்டகைமுனுவின் பரம்பரை வழிவந்தவர் என்றும் ஆணித்தரமாக தனது கருத்துக்களை முன்வைத்துள்ளார்.
அதற்கிடையே தாம் துட்டகைமுனு மன்னனின் உண்மையான வாரிசுகள் தான் என்று நிரூபிக்கும் வகையில் ராஜபக்ஷவினரும் தற்போதைய நாட்களில் அனுராதபுரம் பூராகவும் தொல்பொருள் ஆய்வுகளை மேற்கொண்டு துட்டகைமுனு மன்னனின் வாளைத் தேடி ஒரு பாரிய தேடலைக் கட்டவிழ்த்து விட்டுள்ளார்கள்.
இதற்கிடையே மஹிந்த ராஜபக்ஷ கௌதம புத்தரின் பரம்பரை வழி உறவினர் என்ற கருத்து பெரும்பான்மை பௌத்த மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியொன்றை உருவாக்கியுள்ளதாக அறிய முடிகின்றது.

இலங்கை முழுவதும் சிங்கள மக்களுக்கே உரியது என்றும், இலங்கையின் அனைத்துப் பாகங்களிலும் முற்காலத்தில் சிங்கள மக்களும் பௌத்த தேரர்களும் பரவி வாழ்ந்ததாக நிரூபிக்கும் ஊடக ஆய்வு நடவடிக்கையை ஜெக்சன் அண்டனியிடம் ஒப்படைக்குமளவுக்கு அவர் ஜனாதிபதிக்கு மிகவும் நெருக்கமான ஒரு கலைஞராவார்.
அவர் இலங்கையின் ஆரம்ப கால வரலாறு பற்றி தொலைக்காட்சியில் நடாத்திவரும் நிகழ்ச்சியின் திரைக்கதைப் பிரதி ஜனாதிபதி செயலகத்திலிருந்தே தயாரித்துக் கொடுக்கப்படுகின்றது.
அவ்வாறான ஒரு நிகழ்ச்சியின் போதே அவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ துட்டகைமுனு மன்னனின் வாரிசு மட்டுமன்றி, கௌதம புத்தரின் பரம்பரை வழி உறவினருமாவார் என்றும் அவர் தன் கண்டுபிடிப்பின் அடிப்படையில் கருத்து வெளியிட்டிருந்தார்.
அவரது கண்டுபிடிப்பின் பிரகாரம் கௌதம புத்தர் தொட்டு மஹிந்த வரையான பரம்பரை வழித்தொடர் பின்வருமாறு அமைகின்றது.
கௌதம  புத்தரின் தகப்பனார் - சுத்தோதன
சுத்தோதனவின் சகோதரர் - அமிதோதன
அமிதோதனவின் மகன் - பண்டுசாக்கிய
பண்டுசாக்கியவின் மகள் - பத்த கச்சானா
பத்தகச்சானா இலங்கை வந்து பண்டுவஸ்தெவி அரசரை மணக்கின்றார்.
அவர்களின் குழந்தை உன்மாத சித்ரா வாகும்.
உன்மாத சித்ராவின் மகன் - பண்டுகாபய
பண்டுகாபயவின் மகன் - முட்டசீவ
முட்டசீவவின் மகன் - தேவானம்பியதிஸ்ஸ
தேவானம்பியதிஸ்ஸவின் சகோதரன் மகாநாக வாகும்.அவர் தான் ருஹுணையில் புதியதொரு இராசதானியை உருவாக்கியவராவார்.
மகாநாகவின் சகோதரன் - யடாலதிஸ்ஸ
யடாலதிஸ்ஸவின் சகோதரன் - கோட்டாபய
கோட்டாபயவின் மகன் - காவன்திஸ்ஸ
காவன்திஸ்ஸவின் மகன் - துட்டகைமுனு
அதன் பின்பு துட்டகைமுனு தொடக்கம் ராஜபக்ஷ பரம்பரை வரையான சங்கிலித்தொடரை ஜெக்சன் அண்டனி விளக்கவில்லை. ஆயினும் துட்டகைமுனுவின் பின் இலங்கையை ஒரே குடையின் கீழ்  கொண்டுவந்தவர் மஹிந்த ராஜபக்ஷ என்றும் அவர் துட்டகைமுனுவின் பரம்பரை வழிவந்தவர் என்றும் ஆணித்தரமாக தனது கருத்துக்களை முன்வைத்துள்ளார்.
அதற்கிடையே தாம் துட்டகைமுனு மன்னனின் உண்மையான வாரிசுகள் தான் என்று நிரூபிக்கும் வகையில் ராஜபக்ஷவினரும் தற்போதைய நாட்களில் அனுராதபுரம் பூராகவும் தொல்பொருள் ஆய்வுகளை மேற்கொண்டு துட்டகைமுனு மன்னனின் வாளைத் தேடி ஒரு பாரிய தேடலைக் கட்டவிழ்த்து விட்டுள்ளார்கள்.
இதற்கிடையே மஹிந்த ராஜபக்ஷ கௌதம புத்தரின் பரம்பரை வழி உறவினர் என்ற கருத்து பெரும்பான்மை பௌத்த மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியொன்றை உருவாக்கியுள்ளதாக அறிய முடிகின்றது.
 நன்றி  தமிழ் வின்   

உலகின் தெய்வம் நீயே

உலகம்  எல்லாம்  அன்னையே போற்றுகின்றது 
முதன்முதலில் பார்ப்பது  உன் முகமே !
மனிதனை உருவாகுவதும் நீயே
இரவும் பகலும் உறங்காமல்
பார்பவளும்  நீயே !
எதையும் எதிர்பார்க்காமல் பாசத்தை
பொழிபவள் நீயே
உலகின் தெய்வம்  நீயே

ஆங்கில அறிவை விருத்தி செய்ய இலவசம்!!!!!!!!!!!!!!!!

பல மொழிகள் பேச என  முன்னர் இந்த தளத்தை அறிமுகப்படுத்தியிருந்தேன். .
  தற்போது இத்தளம் பல புதிய வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.  இங்கு Active English ஆறு நாட்களுக்கு இலவசம் . ஜயோ!!! இலவசம் என்று சொல்லி கருணாநிதி மாதிரி நான் ஒட்டு கேட்கவில்லை. ஆங்கிலம் கற்க ஆவல் உள்ளவர்கள் Active English என இத்தளத்தில் தேடி உங்களது ஆங்கில அறிவை விருத்தி செய்து கொள்ளுங்கள்.Facebook  வைத்திருபவர்கள் Facebook  ஊடாகவே இத்தளத்தில்  இணைந்து  கொள்ளலாம்.

மிதிவெடியை மட்டும் நம்பி வாழும் 90 ஆயிரம் விதவை தமிழ் பெண்கள்

மிதிவெடியை நம்பி வாழும் 90 ஆயிரம் விதவை பெண்கள் - இந்த சோகம் உலகத்தில் எங்கும் நடந்திரக்கவில்லை இலங்கை இராணுவம் தமிழீழ விடுதலைப் புலிகளை அளிக்கவும் தமிழீழ விடுதலைப் புலிகள் இலங்கை இராணுவத்தை தாக்கவும் தமிழர் தாய் நிலத்தில் மட்டும் உயிர் கொல்லி மிதி வெடிகளை மில்லியன் கணக்கில் விதைத்தனர். பல ஆயிரம் மனிதர்களை இவை சாதி மத மொழி பேதம் இன்றி அங்கவீனர்கள் ஆக்கியது

இறுதியாக யுத்தம் முடிவுக்கு வந்தபோது இண்று இந்த மிதி வெடிகளையே நம்பி வாழும் நிலைக்கும் தமிழ் பெண்களில் பல ஆயிரம் பேர் தள்ளபட்டுள்ளனர். விதவை பெண்களின் வாழ்வே மிதிவெடியாகிபோயுள்ள நிலையில் இவற்றை அல்ஜசீரா ஆவணப்படுத்தி உள்ளது. இந்த சோகம் உலகத்தில் எங்கும் நடந்திரக்கவில்லை என்கிறது ஆவணம்.

தமிழகத்தின் சட்டசபைத்தேர்தல் வாக்களிப்பு நடைபெறும் வரை தடுக்கப்பட்ட அறிக்கை

தமிழகத்தின் சட்டசபைத்தேர்தல் வாக்களிப்பு நடைபெறும் வரை நிபுணர் குழுவின் அறிக்கையை வெளியிடுவதை பான் கீ மூனின் பிரதம அதிகாரி விஜய் நம்பியாரே நிறுத்தி வைத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐக்கிய நாடுகளின் செயலாளர் பான் கீ மூனின் நிபுணர் குழுவின் போர்க்குற்ற அறிக்கை தொடர்பில் ரஸ்யா, தமது கருத்தை வெளியிட்ட போதும் சீனாவின் இலங்கைக்கான தூதுவர் ஊடகங்களுக்கு கருத்து எதனையும் தெரிவிக்கவில்லை
இதற்கான காரணமாக அவருக்கு ஆங்கிலம் தெரியாது எனக்கூறப்பட்டதாக சண்டே லீடர் குறிப்பிட்டுள்ளது
இந்தநிலையில் ஏன் அவர், மொழிப்பெயர்ப்பாளரை கொண்டு ஊடகங்களுக்கு கருத்தை கூறியிருக்க முடியாது என்று சண்டே லீடர் கேள்வி எழுப்பியுள்ளது
இந்தநிலையில் ஜனாதிபதியின் சகோதரரும் இலங்கை இந்திய உறவுக்கு முக்கியமானவருமான பசில் ராஜபக்ச, பான் கீ மூன் நிபுணர் குழுவின் அறிக்கை தொடர்பில் எவ்வித கருத்துக்களையும் வெளியிடாமல் இருந்து வருகிறார்.
இதற்கான காரணமாக, அவர் புலிகளுடனான இறுதியுத்தத்தின் போது சர்வதேசத்துடன் கொண்டிருந்த தொடர்புகள் என்று சண்டே லீடர் குறிப்பிட்டுள்ளது.
எனினும் ஆங்கில ஊடகம் ஒன்று, பசில் ராஜபக்ச. பான் கீ மூனின் அறிக்கைக்கு எதிராக செயற்படுவதாக செய்தி வெளியிட்டுள்ளமையை சண்டே லீடர் சுட்டிக்காட்டியுள்ளது.
அவரே நிபுணர் குழுவின் அறிக்கையை தாருஸ்மான்pன் அறிக்கை என்ற பெயரில் அழைக்க வேண்டும் என்று ஆலோசனை கூறியுள்ளதாகவும் ஆங்கில ஊடகத்தை கோடிட்டு சண்டே லீடர் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே ஐக்கிய நாடுகளின் செயலாளர் பான் கீ மூன் இலங்கை வந்தபோது, அவருடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கூட்டு அறிக்கையில் கையெழுத்திடுவதை பசில் ராஜபக்ச விரும்பவில்லை.
எனினும் பசிலின் கருத்தை கேட்காமலேயே மஹிந்த ராஜபக்ச, பான் கீ மூனுடன் கூட்டு அறிக்கையில் கையெழுத்திட்டார்.
இந்தநிலையில் தற்போது அந்த அறிக்கையை பான் கீ மூன் தமக்கு சாதகமாக பயன்படுத்துவதை பசில் ராஜபக்ச சுட்டிக்காட்டியுள்ளார். அதன் காரணமாகவே இலங்கை பாரிய நெருக்கடிக்குள் சிக்கியுள்ளதாகவும் பசில் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் இந்தியாவின் அழுத்தத்தின் அடிப்படையில் 13 வது அரசியலமைப்பு சீர்திருத்தத்தை அமுல்செய்யவேண்டும் என்று பசில் ராஜபக்ச, மஹிநத ராஜபக்சவுக்கு கூறியிருக்கிறார்.
எனினும் அதனை மஹிந்த ராஜபக்ச நிராகரித்து விட்டார்.
அதன் பின்னரே பசில் ராஜபக்ச, மஹிந்த ராஜபச்சவுக்கு ஆலோசனை வழங்குவதில் இருந்து தவிர்க்கப்பட்டார் என்றும் சண்டே லீடர் குறிப்பிட்டுள்ளது. இந்தநிலையில் பசில் ராஜபக்ச, பான் கீ மூனின் நிபுணர் குழுவின் அறிக்கைக்கு எதிராக செயற்படுகிறார் என்ற செய்தி வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்கிடையில் தமிழகத்தின் சட்டசபைத்தேர்தல் வாக்களிப்பு நடைபெறும் வரை நிபுணர் குழுவின் அறிக்கையை வெளியிடுவதை பான் கீ மூனின் பிரதம அதிகாரி விஜய் நம்பியாரே நிறுத்தி வைத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த அறிக்கை தமிழக சட்டசபை தேர்தலுக்கு முன்னர் வெளியிடப்படுமானால் அது ஆளும் திராவிட முன்னேற்றக்கழகம் மற்றும் காங்கிரஸ் கூட்டணிக்கு பாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தி விடும் என்ற காரணத்தாலேயே அதனை சட்டசபை தேர்தலின் பின்னர் வெளியிட நம்பியார் தமது பங்கை செலுத்தியதாக சண்டே லீடர் குறிப்பிட்டுள்ளது.

இந்தநிலையில் 13 வது அரசியலமைப்பை இலங்கை அரசாங்கம்; இன்னும் நடைமுறைப்படுத்தாமையே பான் கீ மூனின் நிபுணர் குழு அறிக்கை தொடர்பில் இந்தியா கருத்து வெளியிடாமைக்கான காரணம் என்று சண்டேலீடர் தெரிவித்துள்ளது
இதற்கிடையில் பான் கீ மூனின் நிபுணர் குழு அறிக்கைக்கு எதிராக ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்ச கருத்து வெளியிடுவதற்கு கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அனுமதியளித்ததாக சண்டேலீடர் குறிபபிட்டுள்ளது.
 நன்றி  தமிழ் வின்