Showing posts with label yahoo. Show all posts

பாஸ்வேர்ட் திருடர்கள் ?

பாஸ்வேர்டுகளை பலர் கடினமானதாக வைக்காமல் எளிதாக வைத்து கொள்கின்றனர்.
இது ஓன்லைன் மூலம் மோசடி செய்பவர்களுக்கும், ஹேக்கர்களுக்கும் நமது கணக்கை வைத்து தவறு இழைக்க எளிதாக போய் விடுகிறது.
ஏன் இப்படி எளிதான பாஸ்வேர்டுகளை வைத்து தவறு செய்பவர்களுக்கு நாம் இடமளிக்க வேண்டும் என கணினி வல்லுனர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
இப்படி மோசடி செய்பவர்கள் எளிதான பாஸ்வேர்டுகளை வைத்துள்ள சாதாரண மனிதர்களின் 73 சதவீத கணினி கணக்குகளை கண்டுபிடித்து விடுவதாக கணினி வல்லுனர்கள் எச்சரிக்கை செய்துள்ளனர்.
பிரபல நிறுவனமான Yahoo கூறுகையில், வயது, abc123, 123456, Welcome, Sunshine, password, princess போன்றவைகளையே பலர் பொதுவான பாஸ்வேர்டுகளாக பயன்படுவதாக கூறியுள்ளது.
இந்த இணைய மோசடி மன்னர்களிடம் இருந்து தப்பிக்க நல்ல கடினமான பாஸ்வேர்டுகளை மக்கள் உபயோகபடுத்துவதே எல்லாவற்றுக்கும் தீர்வாக இருக்கும் என்பது கணினி வல்லுனர்களின் பொதுவான கருத்தாக உள்ளது.