Showing posts with label சிறுநீரகம். Show all posts
ஒரு ஆப்பிளில் இருக்கும் முழு சக்தியும் ஒரு நெல்லிக்காயில் இருக்கிறது!!!!
தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரிடம் செல்ல வேண்டாம் என்பது பழமொழி. ஆனால் ஒரு ஆப்பிளில் இருக்கும் முழு சக்தியும் ஒரு நெல்லிக்காயில் இருக்கிறது என்பது அறிவியல் உண்மை.
1. தினம் ஒரு நெல்லிக்காயை உண்டால் அது தேகத்திற்கு புத்துணர்ச்சியைக் கொடுத்து நாம் இளமையாக இருக்க உதவும். இருதயம், சிறுநீரகம் பலப்படும்.
2. ஒரு டேபிள் ஸ்பூன் நெல்லி சாறையும், அரை ஸ்பூன் தேனையும் கலந்து தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் கண் நோய் வராது.
3. நெல்லிச்சாறுடன் பாகற்காய் சாறைச் சேர்த்துச் சாப்பிட்டால் கணையத்தைத் தூண்டி இன்சுலின் சுரப்பை அதிகப்படுத்தி சர்க்கரை வியாதியைத் தடுக்கும்.
4. நல்ல சுத்தமான தண்ணீரில் இரண்டு நெல்லிக்காய்களைப் போட்டு ஊறவைத்து அந்தத் தண்ணீரை எடுத்து கண்களை அகல விரித்து கழுவவும். கண்ணுக்குச் சிறந்த மருந்து இது. கண் சிவந்து புண்ணாகுதல் முதலிய வியாதிகளை குணப்படுத்தும்.
5. அழகு சாதனப் பொருள்கள் தயாரிப்பதிலும் நெல்லிக்காய்க்கு ஒரு பிரதான இடம் உண்டு. நெல்லியின் உள்ளிருக்கும் கொட்டைகளை நன்கு பொடி செய்து அதை தேங்காய் எண்ணெயில் கலந்து நன்றாக கொதிக்க வைத்து பின் குளிர வைத்து தலைக்குத் தடவி வந்தாலும் தலை பளபளப்பாகவும், கருமையாகவும், அடர்த்தியாகவும் இருக்க உதவும்.
6. நெல்லிக்காய் ஊறுகாய் போட்டும் சாப்பிட்டு வரலாம். நெல்லிக்காயில் அதிக மருத்துவ குணம் இருக்கிறது என்பது தெரியும். ஆனால் அதில் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி தரும் விடயங்கள் இருப்பது பலருக்குத் தெரிவதில்லை.
Subscribe to:
Posts
(
Atom
)