புகைப்பிடிக்கும் பழக்கம் ஏற்படுவது எப்படி ?


நவீன உலகில் புகைபிடிப்பது மிகவும் சர்வ சாதாரணம்  தண்ணீர் பருகுவது போல ஒவொரு மனிதரும் புகை பிடித்து  வருகின்றனர் .நான் பல புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களிடம் எப்படி இந்த பழக்கம் ஏற்பட்ட்து என்று கேட்டேன். அனைவரும் நண்பர்கள் மூலம் தர்ம உபதேசம்   முதல் சிகரட்  இலவசமாக  ஏற்பட்டது அத்துடன் நீ என்ன கற்கால மனிதனா? 21 ம் நூற்றண்டில் புகை பிடித்தால் தான் நவீன மனிதன் புகை பிடிப்பவர்களைதான்  தற்காலத்து பெண்கள் பார்க்கிறார்கள் ,நீ என்ன சின்ன பிள்ளையா ? என பல நண்பர்கள் கேலி  செய்வதால் நண்பர்கள் எங்கே  வெறுத்து விடுவார்கள் என்று பயந்து  புகைபிடிக்க  தொடங்கி விட்டேன் என்று கூறினர்.இந்த தம்முக்குள் இவ்வளவு குப்பையா???? புகைப்பிடிப்பதனால் சில நிமிடங்களிலேயே உடலுக்கு புத்துணர்ச்சி ஏற்படுவதுடன் உடலுக்கு தீங்கு ஏற்படுவதாக அமெரிக்க ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். புகைப்பிடிப்பதனால் உடலுக்கு தீங்கு ஏற்பட வருடக் கணக்கு செல்லாது என சுட்டிக்காட்டியுள்ளனர். முதலாவது சிகரட்டை புகைப்பிடிப்பதன் மூலமே உடலுக்கு தீங்குஏற்படுவதாக ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். புற்று நோய் ஏற்படக் கூடிய சில வகை இரசாயனப் பொருட்கள் சிகரட் வகைகளில் காணப்படுவதாகவும், அவை புகைப்பிடித்து சில நிமிடயங்களிலேயே உடலில் இரசாயன தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளனர். புகைப்பிடித்து 15 முதல் 30 நிமிடங்களுக்குள் உடலில் மாற்றங்கள் ஏற்படுவதாகக் குறிப்பிட்டுள்ளனர். புகைப்பிடித்தலை கூடிய விரைவில்


கைவிடுவதன் மூலம் ஆபத்துக்களை தவிர்க்க முடியும் புகைப்பிடிப்து பாவமா ? இதை பற்றி வேதம் என்ன சொல்கின்றது ?
எசேக்கியேல் 8 7. அப்பொழுது அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, இதைக் கண்டாயா? இங்கே யூதா வம்சத்தார் செய்கிற அருவருப்புகள் அற்பமான காரியமா? அவர்கள் தேசத்தைக் கொடுமையினால் நிரப்பி என்னை அடிக்கடி கோபமூட்டுகிறார்கள்; இதோ, அவர்கள் திராட்சக்கிளையைத் தங்கள் நாசிக்கு நேராகப் பிடிக்கிறார்கள். புகைப்பிடிக்கும் பழக்கதுக்கு அடிமையாகி தங்களது உடலை கோடுப்பவர்களுக்கு அந்த பழக்ககத்தில் இருந்து விடுதலை கிடைக்க இறைவனிடம் வேண்டுவோம்

கடவுள் என்ற பெயரில் தங்கத்தை திருடும் வேற்றுகிரகவாசிகள்?

தங்கம் சங்க காலம் முதல் இன்று வரை ஓர் தனிப்பட்ட அவா மனிதர்களுக்கு இதன் மீது காணப்படத்தான் செய்கின்றது.
இது வெறுமனே பொருளாதார நோக்கத்திற்காகவும் ஆபரணங்களுக்காகவும் மட்டுமே பயன்படுத்தப்படுவதில்லை.
மாறாக அதன் முக்கிய பயன்பாட்டில் ஒன்று தான் தங்கம் என்பது சிறந்ததொரு மின்கடத்தி நாம் அன்றாடம் பயன்படுத்தும் அனைத்து மின் சாதனங்களிலும் இதன் பங்கு நிச்சயம் காணப்படுகின்றது.
அது சிறிய அளவாகவே பயன்படுத்தப்பட்டாலும் அதன் பயன்பாடு என்பது மிக முக்கியமான ஒன்று.
மேலும் விண்வெளிக்கு அனுப்பப்படும் விண்கலங்கள், செயற்கை கோள்கள், விண்வெளி ஓடங்கள் போன்றவற்றில் கதிர்வீச்சை தடுக்கும் கவசமாக இது பயன்படுத்தப்படுகின்றது.
விண்ணில் சுற்றித்திரியும் டெலஸ்கோப்புகள் என அனைத்திலும் தங்கம் ஒரு போர்வை போல் சுற்றப்படுகின்றது.
அந்த தங்க போர்வை தான் அதன் உள்ளே காணப்படும் மின்னனு சாதனங்களை விண்வெளியின் அபாய கதிர்வீச்சுகளில் இருந்து பாதுகாக்கின்றது.
சற்றே சிந்தித்து பார்ப்போம், வேற்றுகிரகவாசிகளுடன் ஒப்பிடுகையில் நாம் விண்வெளி செயற்பாடுகளில் பின்தங்கியவர்கள் தான் நமக்கே விண்வெளி செயற்பாடுகளுக்கு இவ்வளவு தங்கம் தேவைபட்டால் எந்நேரமும் விண்ணில் சுற்றிதிரியும் அவர்களுக்கு சுமார் எவ்வளவு தங்கம் தேவைபடுமாக இருக்கும்?
உண்மையில் பார்க்க போனால் இன்று நாம் பயன்படுத்தும் தங்கம் குறைவுதான் முன்னைய காலபகுதிகளில் அதிகளவான தங்கம் காணப்பட்டது. அன்றைய மாளிகைகளின் மேற்கூரையாகவும் தங்கத்தை பயன்படுத்தியிருக்கின்றார்கள்.
பல ஆயிரம் வருடங்களுக்கு முன் சிந்து நதியில் தங்கத்தால் ஆன படகுகள் பயன்படுத்தப்பட்டனவாம்.அதாவது நாம் இன்று இரும்பை பயன்படுத்து போலவே அன்று தங்கம் அதிக அளவில் காணப்பட்டுள்ளது.
அவ்வாறு எனின் அந்த தங்கங்கள் எங்கே சென்றன?சில நேரங்களில் வேற்றுகிரகவாசிகள் கூட நமது தங்கத்தை திருடி செல்ல வாய்புகள் அதிகம் அதற்காக தான் அவர்கள் அடிக்கடி பூமிக்கு வந்துவிட்டு செல்லலாம்.
இவ்விடத்தில் தான் இறைவனும் வேற்றுகிரகவாசியும் ஒன்று என்ற கருத்தும் உருவாக ஆரம்பிக்கின்றது.
காரணம் நமது இந்து மத கோட்பாட்டின் அடிபடையில் அன்றில் இருந்து இன்று வரை இறைவனுக்கு தங்கம் காணிக்கையாக்கப்பட்டு தான் வருகின்றது.
இந்து மத கடவுள்களும் தங்க ஆபரணங்களை அதிக அளவில் அணிந்தபடி தான் (சிவனை தவிர்த்து) நமக்கு காட்சியளிக்கின்றது.
ஒரு வேளை விண்வெளியில் சுற்றிதிரியம் வேற்றுகிரக வாசிகள் என யுகிக்கும் கடவுள்களும் தம்மை விண்வெளி கதிர்வீச்சில் இருந்து காப்பாற்றி கொள்வதற்காகவும் தங்க ஆபரணங்களை அணிந்திருக்கலாம் அல்லவா?

வாட்ஸ் அப் வீடியோ காலிங் வசதி!

வாட்ஸ் அப்பில் இதுவரை குரல் அழைப்பு வசதி மட்டுமே இருந்து வந்த நிலையில், தற்போது வீடியோ காலிங் அழைப்பு முறையை அறிமுகம் செய்துள்ளது. உலக அளவில் வாட்ஸ் அப் சமூக வலைதளத்தை உபயோகப்படுத்தும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆண்ட்ராய்டு, ஆப்பிள், விண்டோஸ் போன்ற இயங்குதளங்களால் ஆன போன் வைத்திருப்பவர்கள் இந்த வாட்ஸ் அப்பை உபயோகப்படுத்த முடியும். இதுநாள் வரை குரல் அழைப்பு வசதி மட்டுமே வாட்ஸ் அப்பில் இருந்து வந்தது. வீடியோ அழைப்பு வசதியை எப்போது ஏற்படுத்துவார்கள் என வாடிக்கையாளர்கள் எதிர்ப்பார்த்திருந்த நேரத்தில் தற்போது சோதனை முயற்சியாக வீடியோ காலிங் முறையை வாட்ஸ் அப் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வீடியோ காலிங் வசதியானது தற்போது விண்டோஸ் இயங்குதளத்தில் இயங்கும் போன்களில் மட்டும் வேலை செய்வது போல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதே போல ஆண்ட்ராய்ட், ஆப்பிள் போன்ற இயங்குதளங்களில் இந்த சேவை விரைவில் தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

புகைப்பிடிக்கும் பழக்கம் ஏற்படுவது எப்படி ?

நவீன உலகில் புகைபிடிப்பது மிகவும் சர்வ சாதாரணம்  தண்ணீர் பருகுவது போல ஒவொரு மனிதரும் புகை பிடித்து  வருகின்றனர் .நான் பல புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களிடம் எப்படி இந்த பழக்கம் ஏற்பட்ட்து என்று கேட்டேன். அனைவரும் நண்பர்கள் மூலம் தர்ம உபதேசம்   முதல் சிகரட்  இலவசமாக  ஏற்பட்டது அத்துடன் நீ என்ன கற்கால மனிதனா? 21 ம் நூற்றண்டில் புகை பிடித்தால் தான் நவீன மனிதன் புகை பிடிப்பவர்களைதான்  தற்காலத்து பெண்கள் பார்க்கிறார்கள் ,நீ என்ன சின்ன பிள்ளையா ? என பல நண்பர்கள் கேலி  செய்வதால் நண்பர்கள் எங்கே  வெறுத்து விடுவார்கள் என்று பயந்து  புகைபிடிக்க  தொடங்கி விட்டேன் என்று கூறினர்.இந்த தம்முக்குள் இவ்வளவு குப்பையா???? புகைப்பிடிப்பதனால் சில நிமிடங்களிலேயே உடலுக்கு புத்துணர்ச்சி ஏற்படுவதுடன் உடலுக்கு தீங்கு ஏற்படுவதாக அமெரிக்க ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். புகைப்பிடிப்பதனால் உடலுக்கு தீங்கு ஏற்பட வருடக் கணக்கு செல்லாது என சுட்டிக்காட்டியுள்ளனர். முதலாவது சிகரட்டை புகைப்பிடிப்பதன் மூலமே உடலுக்கு தீங்குஏற்படுவதாக ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். புற்று நோய் ஏற்படக் கூடிய சில வகை இரசாயனப் பொருட்கள் சிகரட் வகைகளில் காணப்படுவதாகவும், அவை புகைப்பிடித்து சில நிமிடயங்களிலேயே உடலில் இரசாயன தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளனர். புகைப்பிடித்து 15 முதல் 30 நிமிடங்களுக்குள் உடலில் மாற்றங்கள் ஏற்படுவதாகக் குறிப்பிட்டுள்ளனர். புகைப்பிடித்தலை கூடிய விரைவில்


கைவிடுவதன் மூலம் ஆபத்துக்களை தவிர்க்க முடியும் புகைப்பிடிப்து பாவமா ? இதை பற்றி வேதம் என்ன சொல்கின்றது ?
எசேக்கியேல் 8 7. அப்பொழுது அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, இதைக் கண்டாயா? இங்கே யூதா வம்சத்தார் செய்கிற அருவருப்புகள் அற்பமான காரியமா? அவர்கள் தேசத்தைக் கொடுமையினால் நிரப்பி என்னை அடிக்கடி கோபமூட்டுகிறார்கள்; இதோ, அவர்கள் திராட்சக்கிளையைத் தங்கள் நாசிக்கு நேராகப் பிடிக்கிறார்கள். புகைப்பிடிக்கும் பழக்கதுக்கு அடிமையாகி தங்களது உடலை கோடுப்பவர்களுக்கு அந்த பழக்ககத்தில் இருந்து விடுதலை கிடைக்க இறைவனிடம் வேண்டுவோம்

கிறிஸ்தவனை Disturb பண்ணாதே Tamil Christian Songs HD | Pr Moses Rajasekar

கிறிஸ்தவனை Disturb பண்ணாதே 

எங்கும் wifi

இன்றெல்லாம் இணையப் பாவனைக்காக அதிகளவில் WiFi தொழில்நுட்பத்தினையே பயன்படுத்தி வருகின்றனர்.
இதனைக் கருத்தில்கொண்டு பல்வேறு தொலைத் தொடர்பாடல் வலையமைப்பு சேவையை வழங்கிவரும் நிறுவனங்கள் 4G தொழில்நுட்பத்தினை WiFi ஆக மாற்றும் சாதனங்களை அறிமுகம் செய்துள்ளன.
எனினும் இவை ஒவ்வொரு நிறுவனங்களுக்கும் தனித்துவமானதாகவே காணப்படும்.
ஆனால் தற்போது 100 வகையான நாடுகளுள் பயணிக்கும்போது எந்தவொரு வலையமைப்பிலிருந்தும் 4G சமிக்ஞையை WiFi சமிக்ஞையாக மாற்றக்கூடிய சாதனம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
GeeFi எனும் இச் சாதனத்தின் ஊடாக அதிகபட்டசம் ஒரே தடவையில் 10 சாதனங்களை இணைக்க முடியும்.
இதேவேளை இச் சாதனத்தினை பயன்படுத்துவதற்கு ரோமிங் வசதி அவசியம் இல்லை என்பதுடன் வரையறையற்ற (Unlimited) இணையப் பாவனையை மேற்கொள்ளவும் முடியும்.
இச் சாதனத்தில் 5,000 mAh மின்கலம் இணைக்கப்பட்டுள்ளதுடன், நீண்ட நேரம் செயற்படக்கூடியதாகவும் இருக்கின்றது.
தற்போது Kickstarter தளத்தில் விளம்பரப்படுத்தப்பட்டுள்ள இச் சாதனத்தின் விலையானது 110 அமெரிக்க டொலர்கள் ஆகும்.

முதுமையை தள்ளிப்போட முடியுமா?

முதுமையில் பறிபோன இளமையை நினைத்து கவலைப்படாதவர்கள் இருக்க முடியாது. அதனால், இளமையை தக்கவைத்துக்கொள்ளும் ஆராய்ச்சியை மருத்துவ விஞ்ஞானிகள் சிந்திக்காமல் இருப்பார்களா?
அந்த ஆராய்ச்சியில் பல காலமாக ஈடுபட்டு வந்தவர்கள் இப்போது வெற்றியும் கண்டுள்ளனர்.
உடலின் முதுமைக்கு காரணம், உடம்பில் உள்ள செல்களின் ஜீன்கள், டி.என்.ஏ. போன்றவை பலவீனமடைவதுதான். அதை எப்படி பாதுகாக்கலாம் என யோசித்த ஆராய்ச்சியாளர்களுக்கு, செல்களில் சக்தி கேந்திரமாக விளங்கும் மைட்டோகாண்ட்ரியாவில் மாற்றங்களை ஏற்படுத்தி முதுமையை கட்டுப்படுத்த முடியும் என அமெரிக்காவின் தேசிய சுகாதார நிறுவனத்தின் ஆராய்ச்சி விஞ்ஞானி வில்ஹெம் போர் முன்பு நம்பிக்கை தெரிவித்திருந்தார்.
அதன்படி, ஆராய்ச்சியாளர்கள் குழு, ஜீன்கள், டி.என்.ஏ.வில் சேதம் ஏற்படுவதற்கு, நிகோடினமைடு அடினைன் டைலூசியோடைடு (என்.ஏ.டி.) என்ற சேர்மம் குறைவதுதான் காரணம் என்பதையும் கண்டுபிடித்தது.
அதனால், அந்த சேர்மத்தை (என்.ஏ.டி.) உருவாக்கி மீண்டும் உடலில் சேர்க்கும்போது, ஜீன்கள், மற்றும் டி.என்.ஏ. புத்துணர்வடைவதையும் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த சேர்மத்தை முதலில் புழுக்களுக்கும் எலிகளுக்கும் சோதனையாக கொடுத்துப் பார்த்தனர். அவர்கள் எதிர்பார்த்தபடியே அவற்றின் செல்கள் புதிய பொலிவுடன் ஆரோக்கியமாக செயல்பட்டுள்ளது. புழுக்கள், எலியின் ஆயுளும் கூடியுள்ளது. அடுத்து மனிதர்களுக்குதான், இனி முதுமைக்கு ஓய்வுதான்.
இதை வில்ஹெம்போர் தலைமையிலான மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

வாட்ஸ்ஆப்அக்கவுண் கண்டுபிடிக்க சூப்பரான வழிமுறைகள்

  • பொதுவாக போலி அக்கவுண்டுகளில் பயன்படுத்தும் வாட்ஸ்ஆப் நம்பர்கள் ஸ்பூப் நம்பர்களால் உருவாக்கம் பெற்றிருக்கும். மேலும் அந்த போலி நம்பர்கள் அமெரிக்க எண்களாக இருக்க அதிக வாய்ப்புகள் இருக்கிறது.
  • 1 என்று தொடங்கும் நம்பர்கள் போலியானவைகள். ஏனெனில் இந்த நம்பர்கள், விஓஎக்ஸ்ஓஎக்ஸ் (voxox) என்ற ஆப் மூலம் உருவாக்கப்பட்டது. எனவே இந்த நம்பர்களில் இருந்து மெசேஜ் வந்தால் அதற்கு ரிப்ளை செய்வதை தவிர்க்க வேண்டும்.
  • 44 எனத் தொடங்கும் நம்பர்கள், அமெரிக்காவை மையமாக கொண்ட எண்களில் இருந்து எப்டபிள்யூ (Fw) கொண்டு உருவாக்கப்பட்ட போலியான வாட்ஸ்ஆப் அக்கவுண்ட்கள். எனவே 44 என்ற தொடக்க எண்களில் இருந்து மெசேஜ் வந்தால் அது போலியானவை என்று உறுதி செய்துக் கொள்ளுங்கள்.
  • உங்களுக்கு போலியான நம்பர்களில் இருந்து மெசேஜ் அனுப்பிய வாட்ஸ்ஆப் அக்கவுண்டின் புகைப்படமானது, ஒரு கார்ட்டூன் அல்லது வேறு ஏதாவது ஒரு போலியான சுயவிவரபடமாக இருக்கும்.

வாட்ஸ் ஆப் மூலம் பணம் பெறுவதற்கு

தற்போது ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்கள் அனைவரும் சாதரணமாக உபயோகிப்பது வாட்ஸ் அப் தான். ஆனால் அதன் மூலம் மற்றவருக்கு பணம் அனுப்ப முடியும்.
வாட்ஸ் ஆப் மூலம் பணம் பெறுவதற்கு நாம் முதலில் நம் போனில் Free Charge ஆப்பை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
இந்த Free Charge ஆப் ஆனது உங்கள் மொபைல் எண் கொண்டு Sign up செய்தால் நாம் அதை Google Play Store ல் பெற முடியும்.
இதை பெற்றவுடன் நமது போனின் திரையில் வலது பக்கத்துக்கு அடியில் உள்ள More என்ற பட்டனை அழுத்தவும். இதை கிளிக் செய்தவுடன் Free Charge On Whats App என்ற அப்ளிகேஷனை கிளிக் செய்யவும்.
இதைத் தொடர்ந்து போனின் திரையின் அடியில் தோன்றும் Enable என்ற பட்டனை கிளிக் செய்யவும்.
இதை செய்வதன் மூலம் நாம் பயன்பாட்டை பெறுவதற்கான அனுமதி வழங்கப்படும், இதன் மூலம் நாம் Set up பணிகள் அனைத்தும் முடிவுக்கு வரும்.
இதற்கு பின்னர் என்ன நாம் வாட்ஸ் ஆப் மூலம் பணம் அனுப்புவது மட்டும் தான்.
இதை செய்வதற்கு Free Charge On Whats App ஐ திறந்து பணத்தை பெற விரும்பும் ஒரு கண்டக்ட்தனை தேர்ந்தெடுக்கவும். பணம் அனுப்ப நீங்கள் பின்வரும் வடிவமைப்பில் மட்டும்தான் செய்தியை அனுப்ப வேண்டும்.
உதாரணமாக, நீங்கள் 500 ரூபாய் அனுப்ப விரும்பினால். '500FC' என டைப் செய்யவும், 100 ரூபாய் அனுப்ப விரும்பினால் '100FC' என டைப் செய்யவும்.
இதை நிகழ்த்தும் போது உங்கள் வாட்ஸ்ஆப் சென்ட் ஐகான் மேலே ப்ரீசார்ஜ் ஐகானை பார்க்க முடியும். இப்போது கிளிக் செய்து பண பரிமாற்றத்தை நிகழ்த்தலாம்.

இண்டர்நெட் இல்லாமலே ஜிபிஎஸ் பயன்படுத்தலாம்!

ஜிபிஎஸ் (GBS) என்பது ஸ்மார்ட்போனில் முக்கியமான அம்சமாகும். இதன் பயன் நாம் ஆளில்லாத இடத்தில் மாட்டிக் கொள்ளும் போது தான் தெரியும்.
இதைப் பயப்படுத்தி குறிப்பிட்ட இடத்தை சென்றடைய கண்டிப்பாக இண்டர்நெட் என்பது அவசியமானதாகும். இப்படிப் பட்ட சூழ்நிலையில் இண்டர்நெட் இல்லை என்றால் என்ன செய்வீர்கள்?
கவலையவிடுங்க.. இண்டர்நெட் இல்லாமலே உங்கள் ஸ்மார்ட்போனில் ஜிபிஎஸ் பயன்படுத்துவது எப்படி என்று பார்க்கலாம்.
  1. குறிப்பிட்ட பயணத்திற்கு முன்பே ஆப்லைன் மேப்பை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். இதை செய்ய உங்களிடம் நிச்சயமாக இண்டர்நெட் இருக்க வேண்டும்.
  2. உங்களிடம் ஒருவேளை கூகுள் மேப்ஸ் (Google maps) ஆப் இல்லையெனில் அதை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
  3. குறிப்பிட்ட இடத்தின் பெயரை கூகுள் மேப்ஸ் ஆப்பில் உள்ளிட்டு நீங்கள் விரும்பும் இடத்தின் தேடலை நிகழ்த்த வேண்டும்.
  4. இடம் பெயரை பதிவு செய்த பின் கீழே உள்ள பதிவிறக்க பொத்தாபை கிளிக் செய்து அதனை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
  5. ஆஃப்லைன் மேப் பதிவிறக்கம் செய்யப்பட்ட பின் நீங்கள் உங்கள் பயணத்தை தொடங்கலாம். உங்கள் இண்டர்நெட்டின் வேகம் குறைவாக இருந்தால் கூட கூகுள் மேப்ஸ் தன்னிச்சையாக குறிப்பிட்ட இடத்தை கண்டறிந்து ஆஃப்லைன் வரைபடங்கள் உதவியுடன் வழிகாட்டலை நிகழ்த்தும்.