அரசியல் வாதிகளை நம்பி அநாதை
ஆனது போதும் திரண்டுவாரீர்.
ஆதரவு அற்றவர்களாக இறந்த ஆத்துமாக்களுக்கு
அஞ்சலி செலுத்த எழுந்து வாரீர்.
இதயத்தில் எரியும் நெருப்பை
கையில் ஏந்த விரைந்து வாரீர்.
உடலில் தீ வைத்தபோதும், திருந்தாத
ஆதிக்க சக்திகளுக்கு புதிய முறையில்
தீ எற்றிடுவோம் வாரீர்.
பாஞ்சாலி, கண்ணகி எமது பாட்டிகள்
என உணர்த்திடுவோம் வாரீர்.