விண்ணப்பத்தை கேட்டருளும்

விண்ணப்பத்தை கேட்டருளும் 
விண்ணில் வாழும் ஜேசு தேவா
 விண்ணப்பத்தை கேட்டருளும்
 விண்ணில் வாழும் ஜேசு தேவா 
வா வா தேவா வா வா தேவா
வா வா தேவா என் மனக் கோவிலில் வா தேவா 
வா வா தேவா வா வா தேவா வா வா தேவா
 என் மனக் கோவிலில் வா தேவா
 அப்பா பிதாவே அன்பான தேவா  மனிதர்கள் குறை நீக்கும் ஆண்டவரே  அப்பா பிதாவே அன்பான தேவா  மனிதர்கள் குறை நீக்கும் ஆண்டவரே 
அன்பான தெய்வமே ஆவியை தாரும் ஆவியின் வல்லமையால் நிறைத்தருளும் 
அன்பான தெய்வமே ஆவியை தாரும் ஆவியின் வல்லமையால் நிறைத்தருளும்
விண்ணப்பத்தை கேட்டருளும் விண்ணில் வாழும்ஜேசு தேவா ......
துன்பம் துயரங்கள் சூழ்ந்திடும் வேளை மனிதனே ஆண்டவரே துதித்திடுங்கள் (2)
ஆவியில் புதுப் படைப்பாய் ஆகிடவே  மனிதனே ஆண்டவரே துதித்திடுங்கள்(2)

தேவன் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக! ஆமென்

பில்லி சூனியம், ஏவல், ஜாதகம்

ஜாதகம் நல்ல நேரம் ஏவல் பில்லி சூனியம் என்பவறை நம்பி வாழ்கையை இழந்தவர்கள்  பலர்.  இந்த காரியத்தில் சில கிறிஸ்தவர்களும் ஈடுபடுகிறனர்.   காரணம் விசுவாச குறைவு அத்துடன் இந்துகள் மத்தியில் வாழுவதால் அவர்களை பின்பற்றுகின்றனர்.  எதுவாக இருந்தாலும் கிறிஸ்தவர்கள் இக்காரியங்களில் ஈடுபடுவது தேவ கோபத்தை ஏற்படுத்தும்,  இவை அனைத்தும் தேவனுக்கு விரோதம் ஆனவை .
                                              இக்காரியங்களை பற்றி மிக விளக்கமாக பரலோகபாதை என்னும் வலைப்பூவில் எழுதியுள்ளார். இவ் வலைப்பதிவு ஆசிரியருக்கு எனது நன்றி எனது வாழ்த்துக்கள்
இதோ லிங்  இங்கே 



ஜேசு சாமி என்ற ஒருவர் இருக்கிறார்

எனது கை தொலைபேசி

அண்மையில் எனது கை தொலைபேசி தொலைந்துபோனது.  எனவே ஒரு புதிய  கை தொலைபேசியை வாங்கி அதன் இலக்கத்தை சில நண்பர்களுக்கு மட்டும் கொடுத்தேன். சில மாதங்களின் பின்னர் எனது சகோதரர் ஒரு விடயம் தொடர்பாக  எனது புதிய கை தொலைபேசி இலக்கத்தை ஒருவரிடம் கொடுத்துவிட்டார். அவர் என்னிடம் நீண்ட நேரம் பேசினார். இறுதியில் அவரது குரல் மிகவும் பரிட்சியமாக இருந்தது. எனவே அவரிடம் வினவினேன். அவரும் என்னை அடையாளம் கண்டு கொண்டார்.
                              இச் சம்பவத்தின் பின்னர் எனக்கு ஒரு வேத வசனம் நினைவுக்கு வந்தது, காரணம் அவரது குரலை வைத்தே அவரை அடையாளம் கண்டு கொண்டேன்.  இதோ வேத வசனம்  
யோவா 10: 27
 என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப் பின் தொடர்கின்றன, என்கிறார் ஆண்டவர்.  
தேவனின் குரலை கேட்பது எப்படி ?

அன்றாடம் இடைவிடாது இறைவனிடம் இறைஞ்சி வேண்ட வேண்டும் .இதன் மூலம் உங்களது குரல் தேவனுக்கு பரிட்சியமாகும் .பின்னர் தேவனது குரல் உங்களுக்கு பரிட்சியமாகும்.நீங்களும் தேவனின் குரலை கேட்கலாம். கிறிஸ்தவர்களுக்கு வேதாகாமம் ஒரு கை தொலைபேசி போன்றது.வேதாகாமத்தை  வாசிப்பதன் மூலமும் தேவனை அறிவதுடன் அவரது குரலையும் நீங்களும் கேட்கலாம்.
தேவன் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக! ஆமென்